தனியார் உரக் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை
20 Dec 2025, 2:23 pm
<p><strong>தனியார் உரக் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை</strong></p>
<p>குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் விருதுநகர், டிச.20- தனியார் உரக் கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் தேவை யற்ற பொருட்களை வாங்கவும் நிர்ப்பந்தம் செய்வதாக விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலை மையில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விவாதம் வரு மாறு: தனியார் உரக்கடைகளில் யூரியா, உரம் ஆகியவற்றின் விலை அதிகமாக உள்ளது. பில் தருவதில்லை. அத்துடன் இதரப் பொருட் களையும் வாங்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்தம் செய்கின்றனர். உரங்கள் தட் டுப்பாடும் அதிகமாக உள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான உரங்களை மாவட்ட நிர்வாகம் இருப்பு வைத்திருந்தால் தட்டுப் பாடு ஏற்பட்டிருக்காது என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செய லாளர் வி.முருகன் புகார் தெரிவித்தார். அப்போது பேசிய வேளாண் இணை இயக்குநர், புகார் வந்த கடைகள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படும். உரத்தட்டுப் பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வனவிலங்குகளால் தென்னை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஒரு தென்னைக்கு ரூ.500 மட் டுமே நிவாரணமாக வழங்கப்பட்டது. தற் போது பாதிப்புக்கு ஏற்ப இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளீர் கள். இது நல்ல திட்டமாக உள்ளது. விரை வில் செயல்படுத்த வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச் சந்திரராஜா தெரிவித்தார். சாதாரணமாக விளைவிக்கும் பொருட்க ளுக்கும், இயற்கை மூலம் விளைவிக்கும் பொருட்களுக்கும் ஒரே விலைதான் கிடைக்கி றது. எனவே, இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளதா? மாவட்டத்தில் எத் தனை பேர் இயற்கை விவசாயிகளாக உள்ள னர். இயற்கை விவசாயம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அங்கீ காரம் வழங்கியதும், தனிக் கூட்டம் நடத்தித் தேவையான உதவிகள் செய்யப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தார். சிவகாசி சுற்றுச் சாலை பணிகள் செய்த போது கால்வாய் மூடப்பட்டு விட்டது. அதை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அழகர்சாமி தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். கான்சாபுரம், வத்திராயிருப்பில் நெல்கொள்முதல் நிலையம் இராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் கட்ட வேண்டுமென மனு அளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்டுவதற்கு அரசு நிலம் உள்ளது எனவும் அம்மையப்பன் தெரிவித்தார். கான்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை துவங்கப்பட் டுள்ளது. ஆனால், நெல் கொள்முதல் நிலை யம் அமைக்கவில்லை. இதனால், தனியார் வியாபாரிகள் குறைவான விலைக்கு விவ சாயிகளிடம் நெல்லை வாங்கும் நிலை உள் ளது என அப்பகுதி விவசாயிகள் தெரி வித்தனர். இதையடுத்து பேசிய ஆட்சியர் உடனடி யாக நெல்கொள்முதல் நிலையம் துவங்கப் படும் என தெரிவித்தார். காட்டுப்பன்றிகள் விவசாயிகளை தாக்கு கிறது. ஆனால், காட்டுப்பன்றியை விவசாயி கள் அழித்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அபராதமும் வனத்துறையால் விதிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண் டும். அண்டை மாநிலமான கேரளாவில் விவ சாயிகள் காட்டுப் பன்றியை அழித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விருதுநகர் மாவட்டத்திலும் விவசாயி கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன்தெரிவித்தார். மேலும் இதில், வேளாண்மை துணை இயக்குநர் அம்சவேணி, இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுபா வாசுகி, செயற்பொறி யாளர் இந்திரா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) செல்வி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.</p>
