மூன்று மாதமாக ஊதியம் வழங்காத தனியார் நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்கள் தவிப்பு
3 Jan 2026, 2:20 pm
<p><strong>மூன்று மாதமாக ஊதியம் வழங்காத தனியார் நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்கள் தவிப்பு</strong></p>
<p>பொள்ளாச்சி, ஜன. 3- பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (NH-83) விரி வாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பாரத்மாலா திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை 131.9 கி.மீ தூரத்திற்கு ரூ.3,649 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகின் றன. இதில் முதற்கட்டமாக கமலா புரம் முதல் ஒட்டன்சத்திரம் வரையி லும், இரண்டாம் கட்டமாக ஒட்டன் சத்திரம் முதல் மடத்துக்குளம் வரை யிலும் பணிகள் நடக்கின்றன. மூன்றாம் கட்டமாக மடத்துக் குளம் முதல் பொள்ளாச்சி வரையி லான பணிகளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ‘டிபி ஜெயின் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் கட்டுமான நிறுவ னம் மேற்கொண்டு வருகிறது. இப் பணியில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார் கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் கள், ஆபரேட்டர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டுள் ளனர். இவர்கள் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் தங்கியுள்ளனர். கால நேரம் பார்க்காமல் வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங் கப்பட வேண்டிய ஊதியத்தை நிர் வாகம் வழங்கவில்லை எனக்கூறப் படுகிறது. பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் கோமங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்திற் குள் ஊதியம் வழங்குவதாக அந் நிறுவனம் உறுதியளித்தது. இருப் பினும், பலமுறை அவகாசம் கோரி யும் இதுவரை ஊதியம் வழங்கா மல் நிறுவனம் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சிஐடியு எச்சரிக்கை இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “நிர்வாகம் உடனடி யாக தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். காலம் கடத்தினால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி சிஐ டியு சார்பில் அடுத்தகட்டப் போராட் டங்கள் முன்னெடுக்கப்படும்,” என எச்சரித்தார். பாதிக்கப்பட்ட தொழிலாளர் கள் வேதனையுடன் கூறுகையில், “குடும்ப வறுமை காரணமாகவே தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தோம். எங்களை நம்பியே ஊரில் உள்ள எங்கள் குடும்பங்கள் உள்ளன. மூன்று மாதங்களாக வரு மானம் இல்லாததால் தற்போது உணவிற்கே வழியில்லாமல் தவிக் கிறோம். குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளை கூட ஈடுகட்ட முடியாமல் எங்கள் குடும்பங்கள் நிற்கதியாக உள்ளன. எனவே, அரசு தலையிட்டு எங்க ளுக்கு நியாயமாக வரவேண்டிய சம்பளத்தை பெற்றுத்தர வேண் டும்,” என கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
<p> </p>
