முந்தய பக்கம்

மூத்த குடிமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனியார் நிறுவனம்

10 Dec 2025, 4:08 pm
மூத்த குடிமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனியார் நிறுவனம்
<p><strong>மூத்த குடிமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனியார் நிறுவனம்</strong></p> <p>பொள்ளாச்சி, டிச.10- பொள்ளாச்சி அருகே உள்ள புரவி பாளையம் என்ற பகுதியில் அமைந் துள்ள சீனிவாசா பார்ம்ஸ் சீனியர் சிட்டி சன் ஹோம் என்ற இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து மூத்த &nbsp;குடிமக்களின் இந்த குடியிருப்புகளை சென்னையைச் சேர்ந்த ஆலம் எஸ் டெப் ஸ்டோன் என்ற கட்டுமான நிறுவ னம் கட்டி, தனித்தனி வீடுகளாக அவர் களுக்கு விற்றுள்ளனர். ஆனால், இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளான கிளப் ஹவுஸ், உணவுக்கூடம், மருத்துவமனை வசதி, &nbsp;பொள்ளாச்சி சென்று வர போக்குவ ரத்து வசதி மற்றும் வீடுகளைப் பராமரிக் கும் வசதிகளை செய்து தருவதாக உறுதி கூறி விற்றுள்ளனர். இதற்கான &nbsp;கட்டணங்களையும் செலுத்தி யுள்ளனர். ஆனால் எதுவும் செய்து தரப் படவில்லை. இதனை கேள்வி எழுப்பு கயில் அந்த நிறுவனத்தினர் மூத்த &nbsp;குடிமக்களை மிரட்டும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் புகார் அளித்துள்ள னர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூத்த &nbsp;குடிமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், தாலுகா செயலாளர் மூ.அன்பர சன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மகாலிங்கம், குடியிருப்போர் நல சங்க &nbsp;தலைவர் எஸ். சரவணபாபு உள்ளிட் டோர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram