கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
28 Jan 2026, 2:33 pm

தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்

கோவை, ஜன.28- கோவை ரயில்நிலையம் அருகே கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்தை வழக்கறிஞர் ஒருவர் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுகுறித்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகநாதன் என்பவர் கோவை ஆட்சி யர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து விசாரணை செய்யப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்ட தனியார் பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் அபராதம் விதித்த னர். இந்நிலையில் சண்முகநாதன் புதனன்று தனியார் பேருந்தில் காந்திபுரத்தில் இருந்து ரயில்நிலையம் வந்துள்ளார். அப்போது ரூ.6 கட்டண பயண சீட்டை வழங்காமல் ரூ.10 க்கான பயணச்சீட்டை வழங்கியுள் ளார். இதுகுறித்து கேட்ட போது இது தான் கட்டணம் என நடத்துநர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பேருந்து ரயில் நிலையம் வந்த போது திடிரென சண் முகநாதன் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீ சார் அங்கு விசாரணை மேற்கொண்டு போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கறிஞரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் பேருந்தை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் தனியார் பேருந்து நடத்தினரும் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ததை ஒப்புக்கொண்ட தோடு, சில்லறை இல்லாத காரணத்தால் பத்து ரூபாய் டிக்கெட் கொடுத்ததாகவும், பயணி தொடர்ந்து கேட்ட தால் மீதத் தொகையை கொடுத்து விட்டேன். தவறு தான் எனவும் தெரிவித்தார்.

டயாலிசிஸ் சென்டர் கட்டிடம் கட்டும் பணி

கோவை, ஜன.28- கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட் பட்ட வார்டு எண் 9 இல் போத் தனூர் சத்திரம் வீதியில், மாந கராட்சி பொது நிதியில் இருந்து ரூ 98.70 லட்சம் மதிப் பீட்டில் டயாலிசிஸ் சென்டர் கட்டும் பணி துவக்க விழா புதனன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாமன்ற உறுப்பினர் எஸ்ஏ. காதர் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்ற நிகழ்வில், மாநகராட்சி மேயர் ரங்கநா யகி பணியினை துவக்கி வைத்தார். இதில், கோவை தெற்கு மாவட்ட திமுக செய லாளர் தளபதி முருகேசன், திமுக மாணவரணி செயலா ளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தங்கள்

உதகை, ஜன. 28- கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி யில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கோவை திருமண்டலப் பேராயரும், கல் லூரித் தலைவருமான பிரின்ஸ் கால்வின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எத்தியோப்பியா தொழில்நுட்ப அமைச்சகத் தின் ஆலோசகர் கிருஷ்ணராஜ் ராமசாமி, நிறு வனர் சுபாஷினி வெங்கடாச்சலம் மற்றும் ‘வில்லேஜ் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’ பிரதி நிதி பாலாஜி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி திட்டங் கள், நிதி ஆதாரங்கள் மற்றும் கருத்தரங்குக ளில் இணைந்து செயல்பட வழிவகை செய் யப்பட்டுள்ளது. காக்னிதோர்ஸ் நிறுவனம் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI), கூகுள் கிளவுட் மற்றும் சர்வதேச சான்றிதழ் பயிற்சி களுடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்ப டும் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற் றுள்ளனர்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள், புத்தக வாசிப்பு அவசியம்

திருப்பூர், ஜன.28 - ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்ந்த அரசுப் பணிக ளுக்கு தேர்வாக விரும்பி போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதுடன், பாடப்புத்த கங்களைத் தாண்டி பல்வேறு புத்தகங்களைப் படிப்பது அவசி யம் என்று திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே. சுரேஷ் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திங்களன்று நடைபெற்ற நிகழ்வில் ரே.சுரேஷ் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரகம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் உடுமலை விரிவு நகராட்சிப் பள்ளி ஆகிய இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுப்பணிகளுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் ஏராள மானோர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். இரண்டு முக்கியமான பண்புகளை கொண்டவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு தேர்வாகிறார்கள். சிறு வயது முதலே செய்தித்தாள் வாசிப் பது, பள்ளிப் பாடப் புத்தகங்களை தாண்டி பல்வேறு புத்தகங்களை வாசிப்பது என இந்த இரண்டு விசயங்களை பின்பற்றினால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். ஆனால் இன்றைய தலைமுறையினர் அலைபேசியில் இ பேப் பர் படிக்கிறோம், மின் புத்தகங்கள் படிக்கிறோம் என்று சொல் கிறார்கள். ஆனால் நேரடியாக செய்தித்தாள்கள், புத்தகங் களை படிக்கும்போது அதில் குறிப்பெடுப்பது, தேவையான வற்றை ஆவணப்படுத்தி வைப்பது, நினைவு கொள்வது என்பது முடியும் எனவே அலைபேசியில் படிப்பது நேரடியாக செய்தித்தாள்கள், புத்தகங்களைப் படிப்பதற்கு இணையா காது என்று கூறினார்.

திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதுகள் பெற்ற நூல்கள்

திருப்பூர், ஜன.28 – தமிழில் நான்கு பிரிவுகளில் எட்டு நூல்கள் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் 2025க்குத் தேர்வு செய்யப் பட்டு பரிசுகள் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வழங்கப்பட் டன. கட்டுரைப் பிரிவில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு, சோம வள்ளியப்பன் எழுதிய உணர்வால் முடியும் என்று நூல் முதல் பரிசு பெற்றது. சத்யா எண்டர்பிரைசஸ் வெளி யிட்டு, லதானந்த் எழுதிய இவர்களைப் போல் நானும் எனும் கட்டுரை நூல் இரண்டாம் பரிசு பெற்றது. கவிதைப் பிரிவில் அகநி வெளியீடு கவிஞர் ஜீ.வெங்கட்ராமன் எழுதிய ஜீவி கவிதைகள் முதல் பரிசும், படைப்பகம் பதிப்பகம் மா.காளிதா ஸின் வேடு இரண்டாம் பரிசும் பெற்றன. நாவல் பிரிவில் எம். ஜே.பப்ளிகேஷன் பொன்.விக்ரம் எழுதிய கச்சேரி மாயக்கா நாவலுக்கு முதல் பரிசும், எதிர் வெளியீடு பிரசாந்த்.வே எழு திய ஆனைமலை நாவலுக்கு இரண்டாம் பரிசும் கிடைத் தன. சிறுகதை பிரிவில் மௌவல் பதிப்பகம் ஹரணி எழுதிய தீம்பெயல் முதல் பரிசும், ஜெய்ரிகி வெளியீடு பசு.தனபாலன் எழுதிய பசு தனபாலன் சிறுகதைகள் நூல் இரண்டாம் பரிசும் பெற்றன.

அமராவதி அணை பூங்காவில் பகத்சிங் சிலை அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

உடுமலை, ஜன.18- சுதந்திர போராட்டத்தின் களப் போராளி மாவீரன் பகத்சிங் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உடுமலை அமராவதி அணை பூங்காவில் அவரது சிலை அமைக்க வேண்டும் என திங்க ளன்று அமராவதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்த னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, தமிழ்நாடு மற்றும் பல் வேறு மாநிலத்திங்களில் இருந்து தின மும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பய ணிகள் வந்து செல்லும் அமராவதி அணையின் கரைப்பகுதியில் இருக்கும் பூங்காவில் மாவீரன் பகத்சிங் சிலை அமைக்க வேண்டும். கிராமத்தில் இருக் கும் மாணவ, மாணவியர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் உடுமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது நூலகம் செயல்படுத்த வேண்டும். பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூராக இருக்கும் அரசு மற்றும் தனியார் மது கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சா ரம் செய்ய வேண்டும். குறிப்பாக அதி காலை முதல் இரவு வரை சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் மது விற்ப னையை தடுக்க வேண்டும். கிராமங்க ளில் இரவு நேரத்தில் காவல்துறை கூடு தலாக ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிய கவுண்ட னூர் ஊராட்சி உரல்பட்டியில் இருக்கும் சுடுகாட்டில் சுற்று சுவர் மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் கண்காணிப்புக்குழு அமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தலைவரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தபட்டி ருந்தன.

திருப்பூரில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.28 – திருப்பூர் மாநகரில் குடிநீர் விநியோ கத்தை மேம்படுத்த வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சில வார்டுகளில் எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறையும், சில வார்டுகளில் நான்கு நாட்க ளுக்கு ஒரு முறையும் என குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் உள்ளது. நான்காவது குடி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டு கள் ஆன நிலையில் இன்னும் குடியிருப்பு களில் குடிநீர் விநியோகம் மேம்படவில்லை. பழைய காலத்தை விட தற்போது நிலைமை மோசமாகி விட்டது. குடிநீர் பகிர்மானக் குழாய்கள் பதித்தது, விநியோகத்திலும் பிரச்சனை உள்ளது. அனைத்தையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றும் வலியு றுத்தினர். அதேபோல் பாதாளச் சாக்கடை பணி களும் மிக மெதுவாக நடைபெற்று வருவதாக புகார் கூறினர். கோடை காலம் நெருங்கும் நிலையில் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினர். அனைத்து வார்டுகளிலும் கள ஆய்வு செய்து குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார். மேலும் பிப்ரவரி 5ஆம் தேதி சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக கூட்டம் நடை பெறாத நிலையில் இந்த கூட்டத்தில் மொத் தம் 621 பொருள்கள் முன்வைக்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரயில்வே பராமரிப்புப்பணி: ரயில் சேவையில் மாற்றம்

கோவை, ஜன.28- ஈரோடு - திருப்பூர் இடையே நடைபெறவுள்ள தண்ட வாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய் யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பு அலுவலர் ஜி.மாரிய மைக்கேல் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பழுதடைந்த தண்டவா ளக் கட்டைகளை மாற்றும் (Sleeper Renewal) பணி கள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, வரும் ஜன.30 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் வண்டி எண் 16843 திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் ஊத்துக் குளி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். தொடர்ந்து, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவு டன், ஊத்துக்குளியிலிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இது இயக்கப் படும். இந்தச் சிறப்பு ரயில், வழக்கமான திருச்சி - பாலக் காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் திருப்பூர், கோவை, போத்தனூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த மாற்று ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அக்கா கணவருக்கு 20 ஆண்டு சிறை

உதகை, ஜன. 28- சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், அவரது அக்கா கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், பெற்றோர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள காப்பகத்தில் தங்கி 11-ம் வகுப்பு பயின்று வந்தார். அச்சிறுமியின் அக்கா, கடலூர் மாவட்டம் நெய் வேலியை சேர்ந்த சுபாஷ் (28) என்பவரைக் காத லித்து திருமணம் செய்துகொண்டார். சுபாஷ் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை தொழிற் சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம், சிறுமி தங்கியி ருந்த விடுதிக்கு சென்ற சுபாஷ், விடுதி காப்பாளரி டம் பேசி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந் துள்ளார். பின்னர், சிறுமியை மிரட்டி, பலமுறை பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார். பயந்துபோன சிறுமி இது குறித்து யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையே, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற் பட்டதால் அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரி சோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய் யப்பட்டது. இது குறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சுபாஷை 2021, ஜூன் 30 அன்று கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்து நீதிபதி எம். செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதில்: குற்றம் சாட்டப்பட்ட சுபாஷிற்கு 20 ஆண்டு கள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. முன்னதாக, இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சுபாஷ், தனது முதல் மனைவி பிரிந்து சென்றதால் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கோவை மாவட்டம் காரமடையில் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்ததை தொடர்ந்து, போலீசார் அவரை மீண்டும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கேரள அரசின் ‘கீரா’ திட்டம்: விவசாய தொழிலதிபராவோர்க்கு ரூ. 2 கோடி மானியம்!

கோவை, ஜன. 28- கேரள மாநில வேளாண் துறையும் உலக வங்கியும் இணைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த ‘கீரா’ (KERA) என்ற புதிய திட்டத்தை செயல்ப டுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் வேளாண் வணிகத்தை மேம்படுத்த தகுதியுள்ள நிறுவனங்க ளுக்கு ரூ. 2 கோடி வரை மானியம் வழங்கப்பட உள் ளது. இது குறித்து கோவையில் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ‘கீரா’ திட்ட அதிகாரிகள் கூறுகையில், கேரளாவின் உயர்தர வேளாண் விளைபொருட் களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைப்பதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்காக உழ வர் உற்பத்தியாளர் நிறுவனங்களையும் (FPC), முன் னணி வேளாண் வணிக நிறுவனங்களையும் (ABP) ஒன்றிணைத்து ‘வேளாண் கூட்டணிகள்’ உருவாக்கப் படும். திட்டச் செலவில் 60% வரை (அதிகபட்சமாக ரூ. 2 கோடி) மானியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்ப டும் கூட்டணிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தொழில் முறை வல்லுநர்களின் ஆலோசனைகள் வழங்கப்ப டும். கேரளா முழுவதும் 150 கூட்டணிகள் உருவாக்கப் பட உள்ளன. முதற்கட்டமாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 கூட்டணிகள் அமைக்கப்படும். இந்த மானியத்தை பெற விண்ணப்பிக்கும் நிறு வனங்கள், ஆண்டு வருமானம் (Turnover) குறைந்த பட்சம் ரூ. 10 கோடி இருக்க வேண்டும். விவசாயிகளு டன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவசியம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO/FPC): குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் மற்றும் 200 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள தகுதியான நிறுவனங்கள் https://pa.kera.kerala.gov.in/ என்ற இணையதளம் வாயி லாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரி வித்தனர்.