தனியார் பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
30 Jun 2026, 1:04 am

தனியார் பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

ஈரோடு, ஜூன் 29- ஈரோடு – கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் கட்ட ணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக பய ணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை – ஈரோடு செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இதுவரை பயண கட்டணமாக 67 ரூபாய் பெறப்பட்டி ருந்தது.

தற்போது தனியார் பேருந்து களில் ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தின சரி பயணம் செய்யும் மாணவர்கள், தொழிலா ளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வெறும் ஒரு பயணத்திற்கு ரூ.8 உயர்வு விதிக்கப்பட்டி ருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தினமும் இரு வேளை பயணம் செய்பவர்களுக்கு மாதாந் திர செலவு கணிசமாக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதேபோல, திருப்பூர் - பெருந்துறை: பழைய கட்டணம் ரூ. 22- லிருந்து தற்போது ரூ. 25 ஆகவும், பெருந் துறை - ஈரோடு: பழைய கட்டணம் ரூ. 13-லி ருந்து தற்போது ரூ. 15 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “தொடர் எரிபொருள் விலை உயர்வு, பேருந்து உதிரிபாகங்களின் விலை ஏற்றம் மற் றும் தினசரி பராமரிப்புச் செலவுகள் கணிச மாக அதிகரித்துள்ளதால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது.

இதுகுறித்து ஏற்கெனவே அரசிடமும் முறைப்படி வலியுறுத்தியுள்ளோம்” என நியா யப்படுத்துகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் போக்கு வரத்து துறை அதிகாரிகள் தலையிட்டு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப் போக்குவரத்தில் திடீர் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.