தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்

20 Feb 2026, 2:39 pm
ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்
<p><strong>ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்</strong></p> <p>தேனி , பிப். 20- ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட &nbsp;விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து &nbsp;புளிய மரத்தின் மீது மோதி ,தலை குப்புற கவிழ்ந்து 37 பேர் படுகாய மடைந்தனர். போடிநாயக்கனூரிலிருந்து &nbsp;மதுரை நோக்கி வெள்ளிக்கிழமை &nbsp;தனியார் பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேரு ந்து ஆண்டிபட்டியை கடந்து டி. பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, எதிரே திரு மங்கலத்தில் ஒரு திருமண நிகழ் வை முடித்துவிட்டு வடுகபட்டி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதி யது. இதில் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, சாலை யோரம் இருந்த பெரிய &nbsp;புளிய மரத்தில் பலமாக மோதி, சாலை யில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த வேகத்தில் உள்ளே இருந்த பயணிகள் கத்தி கூச்ச லிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டி கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். தகவலறிந்த ஆண்டி பட்டி போலீசார் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுக ளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க 10-க்கும் மேற்பட்ட ஆம்பு லன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. காயமடைந்த 37 பேரும் மீட்கப் பட்டு தேனி க.விலக்கு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலருக்கு தலையிலும் முகத்திலும் பலத்த ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அல்லிநகரம் அசோக்குமார் (40), விருதுநகர் கணேஷ் ராம் (49), பண்ணப்பட்டி அரசு போஸ் (30), மேல்மங்கலம் ராமையா (79), ஸ்ரீரங்கபுரம் கணேசன் (62), உத்தமபாளையம் சுபாஷினி (26), 2 வயது சிறுமி மலர்விழி, மேல்மங்கலம் கார்த்திக் ராஜா (29), தேவாரம் கோவில வேணி (63), ஓடைப்பட்டி ஜீவா (22), போடி மணிகண்டன் (40), குச்சனூர் ரவி (14), சிலமலை முருகன் (48), காரைக்குடி மோனிஷா (23), க.விலக்கு சுகன்யா (36), கம்பம் ஆனந்த் (46), நாகம்மாள் (48), ஜோதி (40), கண்டமனூர் கோபால் (63), சக்கம்பட்டி ஜனனி (17), அம்சவல்லி (42), வருசநாடு திவ்யா (26), வைகைபுதூர் தங்கராஜ் (70), கொடுவிலார்பட்டி முத்து சுருளி (32), மதுரை அவ னியாபுரம் ரேணுகா (52), கிருஷ்ண மூர்த்தி (65), அய்யாச்சாமி (65), சின்னமனூர் புஷ்பம் (45), போடி பத்மாவதி (64), பொள்ளாச்சி கோகிலா (36) மற்றும் ஆண்டி பட்டி சூர்யா (26) ஆகிய 32 பேர் காயமடைந்தனர். காரில் பயணம் செய்த வடுக பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மணி கண்டன் (27), பிரபாகரன் (62), வெங்கடேஸ்வரி (58), சித்ரா (44), பாண்டியம்மாள் (65) ஆகிய 5 பேருக்கு வெளிப்படையான காயங்களின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் &nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக மதுரை தேசிய நெடுஞ் சாலையில் &nbsp;சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.