முந்தய பக்கம்

கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

11 May 2026, 12:04 am
கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

நாமக்கல், மே10- சாலையை கடக்க முயன்ற கனரக வாக னத்தின் மீது மோது வதை தவிர்க்க முயன்ற தனியார் பேருந்து, எதிரே வந்த காரின் மீது மோதிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்ற னர்.

சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று, வெப்படை அருகே சனியன்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, பால் ஏற்றி சென்ற கனரக வாகனம் திடீரென சாலையை கடக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், பேருந்து கனரக வாகனத்தின் மீது மோதும் சூழல் ஏற்பட்டதால், சாலையின் எதிர்புறமாக பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது பள்ளிபாளையத்திலி ருந்து சேலம் நோக்கி வந்த காரின் மீது பேருந்து வேக மாக மோதியது. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற் கொண்டு வரும் நிலையில், விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram