தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே தனியார் விடுதி?

15 Nov 2025, 4:09 pm
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே தனியார் விடுதி?
<p><strong>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே தனியார் விடுதி?</strong></p> <p>உடுமலை,நவ.15- புலிகள் காப்பகமாக அறிவிக் கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை யின் அடிவாரப் பகுதியில் தனியார் விடுதிகள் கட்ட எந்த வகையில் வனத்துறை அனுமதி வழங்கியது என சனியன்று உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு &nbsp;கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் &nbsp;சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். உடுமலை வனசரகர் வாசு தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், வன விலங்குகள் விளைநிலங் களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். வன விலங்குகளால் சேதம் ஏற்பட்ட பயிர்களுக்கு உட னடியாக நிவாரணம் வழங்க வேண் டும். உடுமலை மற்றும் மடத்துக் குளம் தாலுகாவில் உள்ள உடு மலை, கொழுமம், அமராவதி மற் றும் வந்தரவு ஆகிய நான்கு வன &nbsp;சரகத்தில் வன எல்லைக்கு மிகவும் &nbsp;அருகில், கடந்த சில மாதங்களாக &nbsp;தனியார் வன விடுதிகள் அதிகள வில் கட்டப்பட்டு வருகிறது. இது போன்ற விடுதிகள் கட்ட எந்த வகை யில் வனத்துறை அனுமதி தருகி றது. இந்த விடுதிகளால் வனத்திற் கும், அதில் உள்ள வன விலங்குக ளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள் ளது. எனவே உடனடியாக வன &nbsp;எல்லைப் பகுதியில் இருக்கும் தனி யார் விடுதிகளை அப்புறப்படுத்த வேண்டும். இது போன்ற விடுதிகள் &nbsp;இனிவரும் காலங்களில் கட்டாமல் &nbsp;இருக்கும் வகையில் வனத்துறை சார்பில் வன எல்லையில் நடைமு றைப்படுத்த வேண்டிய பாதுக்காப் புகள் குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். கடந்த 2022 ஆண்டு மனுப்பட்டி &nbsp;அருகே இருசக்கர வாகனத்தை காட்டுப்பன்றி தாக்கியதில் கன்னி முத்து என்பவர் மரணம் அடைந் தார். அவருக்கு வரவேண்டிய இழப் பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காட்டுப்பன்றி விளைநிலங்களுக்கு வராமல் தடுக்கும் வகையில் கம்பி வேலி &nbsp;அமைக்க மானியம் வழங்க வேண் டும். வனத்துறை சார்பில் விவசாயி களுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். மேலும், திருப்பூர் மாவட்ட அளவில் விவ சாயிகள் கலந்து கொள்ளும் வகை யில் மாவட்ட வன அலுவலர் தலை மையில் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து வனச்சரகர் கூறு கையில், வனத்துறை இடத்திலோ அல்லது அதன் &nbsp;அருகில் விடுதிகள் &nbsp;கட்ட எவ்வித அனுமதியும் வழங்கப் படவில்லை. விதிகளை மீறி கட்டப் பட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்து வதை தடுக்க உரிய நடவடிக்கை &nbsp;எடுக்கப்படும் என உறுதியளித் தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் &nbsp;தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், நிர்வாகிகள் பாலதண்டபாணி, அருண்பிரகாஷ் மற்றும் பட்டு விவ சாயிகள் சங்கத்தின் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.