சிறைவாசிகள் எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ரத்த சொந்தங்கள் மூலம் அளிக்கலாம்
15 Dec 2025, 2:48 pm
<p><strong>சிறைவாசிகள் எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ரத்த சொந்தங்கள் மூலம் அளிக்கலாம்</strong></p>
<p>சென்னை, டிச.15 - சிறைக் கைதிகள் சிறப்பு தீவிர திருத்தத் திற்கான படிவங்களை விண்ணப்பிக்க அனு மதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத் திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடக் கோரி, மதுரை கே.புதூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ராஜா தாக்கல் செய்த அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள், தடுப்பு காவல் கைதிகள் மற்றும் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிட மும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேர்தல் ஆணையம் தரப்பில், சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, சிறையில் இருக்கும் வாக்காளர் சார்பில், அவரது ரத்த சொந்தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும், இல்லாவிட்டால், பின்னாளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் போதும் விண்ணப்பங்களை அளிக்கலாம்” என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு, விசார ணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.<br />
</p>
