தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

8 Mar 2026, 3:42 pm
திருச்சி விரைவு செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிய  கைதி சிகிச்சை பலனின்றி பலி

சிவகங்கை, மார்ச் 8- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனி யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஜீவா நகரைச்  சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர்  ஆகியோரை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் இருவர்  தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) என்பவரை கைது செய்ய  மானாமதுரை போலீசார் முயன்றபோது, அவர் மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதலில் மானாமதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை  பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் டெலிசன்  நள்ளிரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விசாரணையின் போது போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் ஆகாஷ் டெலிசன் உயி ரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் மானாமதுரையில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

மது விற்றவர் கைது

போடி, மார்ச் 8- போடி அருகே விசுவாசபுரம் சுடுகாடு பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக கிடைத்த தகவலின் பேரில் போடி தாலுகா காவல்  நிலைய போலீசார் அங்கு கண்காணிப்பு மேற்கொண்ட னர். அப்போது விசுவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி யின் மகன் சரவணன் (31) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் பைக் திருட்டு

போடி, மார்ச் 8- போடி சர்ச் தெருவைச் சேர்ந்த காளிராஜ் (43) என்ப வர், போடி பழைய பேருந்து நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகிலுள்ள சிவன்  கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அவர் போடி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி நகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்

போடி, மார்ச் 8- போடி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கே.சுதா, நாகர்கோவில் மாநகராட்சியில் உதவி  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கே.சுதா பணியாற்றும் முறையில் குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்ததாக கூறப்படு கிறது. மேலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற  கூட்டத்திலும் பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநடப்பு செய்த னர். இந்த நிலையில் நிர்வாக நலன் கருதி போடி நகராட்சி  ஆணையாளர் கே. சுதாவை நாகர்கோவில் மாநகராட்சி யின் உதவி ஆணையாளராக மாற்றி சென்னை நகராட்சி  நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

நத்தம், மார்ச் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அருள் மிகு மாரியம்மன் கோவில் தென் தமிழ்நாட்டில் மிகவும்  பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவி லில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்களன்று பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி,  பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல் என நடை பெறுகிறது. செவ்வாய்க்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதன்கிழமை காலை அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் நடைபெறும். மேலும் பொதுச் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி களை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக் கந்தர்பாட்சா மேற்பார்வையில் செயல் அலுவலர் விஜயநாத், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.5.69 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி துவக்கிவைத்தார்

சின்னாளப்பட்டி, மார்ச் 8- ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றி யம், சில்வார்பட்டி ஊராட்சியில் ரூ.5.69 கோடி  மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணி களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளியன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அப்பனம்பட்டி பகுதி யில் உள்ள பெருமாள்கோவில் பழைய குளம்,  கோணார்குளம், மந்தைகுளம் மற்றும் அப்ப னம்பட்டி குளம் ஆகியவற்றை இணைத்து குடகனாறு ஆற்றுவரை 12 கிலோமீட்டர் தொலைவில் மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி களை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பனம்பட்டியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்  பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம், சில்வார்  பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  ரூ.34.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள், சில்வார்பட்டி ஊராட்சியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மற்றொரு அங்கன்வாடி மையம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பழைய முத்தனம்பட்டியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் மாங்கரையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம், கதிரை யன்குளத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவுக் கூடம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டன. இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.5.69 கோடியாகும். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.கங்காதாரணி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், ரெட்டியார்சத்திரம் வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மலரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டுநர்கள், பயிற்சிப் பள்ளிகள் கடும் அவதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படுமா?

திருவில்லிபுத்தூர், மார்ச் 8- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திரு வில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலு வலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர்  பணியிடம் நீண்டகாலமாக காலியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அலு வலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்  ஒருவர் மட்டுமே இராஜபாளையத்தில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வியா ழக்கிழமை வருவதால், மீதமுள்ள நாட்களில் அலுவலகம் செயல்படாமல் இருக்கும் நிலைமை உள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிகள்  நிலை 1 மற்றும் நிலை 2 அடிப்படையில் இருவரை நிரப்ப வேண்டும் என்பதே வட்டார போக்குவரத்து அலுவலக விதி.  ஆனால் திருவில்லிபுத்தூர் அலுவல கத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலி பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு சமீபத்தில் மாநிலம் முழு வதும் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குறைந்தபட்சம் ஒரு பணி யிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வட்டாரப் பிர கடனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் ராணுவத்தில் சாதனை

இராமநாதபுரம், மார்ச் 8- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு  கல்லூரி மாணவர்கள் அதிகளவில் இந்திய  ராணுவத்தில் சேர்ந்து சாதனை படைத்து வருவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரி யர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கடலாடி அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணினி அறிவி யல், பி.காம், பி.பி.ஏ ஆகிய ஐந்து பிரிவு கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்களில் கல்லூரி மாண வர்கள் பங்கேற்று, ஆண்டுக்கு சுமார் 30 முதல் 50 பேர் வரை தேர்ச்சி பெற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தமிழ்த்துறையில் ஆண்டு தோறும் முதலாம் ஆண்டில் குறைந்தபட் சம் 40 முதல் அதிகபட்சம் 75 மாணவர்கள் வரை சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால்  இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் பல மாணவர்கள் இந்திய ராணுவம் மற்றும்  காவல்துறை பணிக்கு தேர்வாகி செல்வ தால், மூன்றாம் ஆண்டு இறுதி பருவத் தேர்வில் சுமார் 30 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் பேராசிரியர்கள் பாடங்கள் நடத்தும் போது மாணவர்கள் அரசு பணி களில் சேருவதற்கான வழிகாட்டுதல்களை யும் தொடர்ந்து வழங்கி வருவதால், தமிழ்த்துறையில் இருந்து அதிகமான மாணவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசு  பணிகளில் சேர்ந்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.