தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போலீசாரை ஏமாற்றி 2-ஆவது முறையாக தப்பிய கைதி: கோவை மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு!

2 hours before
போலீசாரை ஏமாற்றி 2-ஆவது முறையாக தப்பிய கைதி: கோவை மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு!

கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்த கைதி ராகவன் என்பவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் ராகவன் (25). இவர் மீது தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் பெங்களூர் போலீசார் ராகவனைக் கோவையில் கைது செய்து அழைத்துச் சென்றபோது, கருமத்தம்பட்டி பகுதியில் அவரிடமிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தேடப்பட்டு வந்த ராகவனை, நேற்று போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து வந்தனர். சிறையின் முதல் நுழைவாயிலைக் கடந்து, மெயின் நுழைவாயிலில் சோதனைக்காகக் காத்திருந்தபோது, ராகவன் திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு மீண்டும் தப்பியோடினார்.

சிறை வளாகம் முழுவதும் தீவிரமாகத் தேடியும் இரவு வரை அவர் சிக்காததால், ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் தேனி மாவட்டத்தில் 17 சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவை மத்திய சிறை வளாகத்திலேயே கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியதுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.