கட்டமைக்கப்படும் பகைமை உளவியலை கேள்விக்குள்ளாக்கும் ‘சிறை’
2 Jan 2026, 3:33 pm
<p><strong>கட்டமைக்கப்படும் பகைமை உளவியலை கேள்விக்குள்ளாக்கும் ‘சிறை’</strong></p>
<p>ஆர். பத்ரி தங்களின் அரசியல் – சமூகக் கண்ணோட்டங்களைப் பரப்பவும், ‘எதிரிகள்’ குறித்த கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கு எதிரான தப்பெண்ணங்களை விதைக்கவும் நாஜிக்கள் திரைப்படக் கலையை நுணுக்கமாகப் பயன்படுத்தி னார்கள். ஹிட்லரும், அவரது அமைச்சரவை சகாவுமான ஜோசப் கோயபல்ஸும் சினிமா வைத் தங்கள் சித்தாந்தக் கருவிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டார்கள். நாஜிக் கள் காலத்தில் வெளிவந்த திரைப்படங் களில் ஆறில் ஒன்று பிரச்சாரப் படமாக இருந்தது. ஜெர்மானிய மக்களின் உணர்வுகளும், நம்பிக்கைகளும் திரைப்படங்களால் எந்தளவுக்குத் தாக்கம் பெற்றன என்பதை ஹிட்லர் உணர்ந்து வைத்திருந்தார். அந்த அபாயகரமான வழியைத்தான் தற்போது இந்தியாவில் இந்துத்துவா அர சியலை முன்னெடுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மோடியும் பின்பற்றுகிறார்கள். ஆம், இந்துத்துவா அரசியலை முன் னெடுக்க இதர அரசியல் நடவடிக்கை களைப் போலவே அவர்களுக்கு “இந்துத்துவா சினிமா”வும் தேவைப்படுகிறது. தீவிர முஸ்லீம் எதிர்ப்பை உள்ளடக்க மாகக் கொண்டும், வரலாற்றைத் திரித்தும், உண்மைகளை மறைத்தும் வெளி யாகும் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற திரைப்படங்கள் நமது அரசியலமைப்பின் ஆன்மாவைச் சிதைக்கும் திட்டத்தோடு தயாரிக்கப்படு கின்றன. இத்தகைய நச்சுச் சூழலில், தமிழில் வெளியாகியிருக்கும் ”சிறை” எனும் படைப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது அடையாளத்தையும் பெயரையும் முன்வைத்து உருவாக்கப்படும் முஸ்லீம் விரோத அரசியலையும், செயற்கையாகக் கட்டமைக்கப்படும் ‘பகைமை’ உளவியலை யும் கேள்விக்குள்ளாக்குவதோடு, அத்த கைய சக்திகளின் நுண்ணரசியலைநுட்ப மாக அம்பலப்படுத்துகிறது இந்த திரைப்படம். பெயரே பெரும் சுமையாகும் அவலம் அப்துல் ரவூஃப் எனும் முஸ்லீம் இளைஞனைச் சமூகமும் அதிகாரமும் நீதித்துறையும் எவ்வாறெல்லாம் கையாள்கின்றன எனும் எளிய ‘ஒன்லைனை’ வைத்து, அழுத்தமான திரைக்கதையை மெருகேற்றியிருக்கிறார் கள் இயக்குநர்கள் தமிழ் மற்றும் சுரேஷ் ராஜகுமாரி. படத்தில் வரும் உரையாடல்கள் ஒவ்வொன் றும் அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை உலுக்குகின்றன. “லாங் எஸ்கார்ட் போகும் போது ஏன் துப்பாக்கியை லோட் பண்ணிருக் கீங்க?” எனும் இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு “அய்யா அக்யூஸ்ட் ஒரு முஸ்லீம்யா, அதான் புல்லட்டை லோட் பண்ணிட்டோம்” எனும் காவலரின் பதில், இன்று காவல்துறையில் ஊடுருவியிருக்கும் மதப் பாரபட்சத்தின் அப்பட்டமான சாட்சி. அதேபோல், “ஏண்டா தப்பிச்சுப் போயிருக் கலாமே?” என ஏட்டு கேட்கும்போது, “எனக்கும் தோணுச்சுய்யா, ஆனா அப்துல்னு இந்த பேரோட நான் தப்பிச்சுப் போய் இங்க என்ன பண்ணிட முடியும்?” என அந்த இளை ஞன் ஆற்றாமையோடு கேட்கும் இடம், ஒரு மனிதனின் பெயரே அவனுக்குப் பெரும் சிறையாக மாறிவிட்ட அவலத்தைப் பேசுகிறது. பொதுப்புத்தியைத் தாக்கும் காட்சிகள் அரசாங்க வளாகங்களில் மிக இயல் பாகக் கோவில்கள் கட்டப்படுவதையும், ஆனால் அதே கோர்ட் வளாகத்தில் அப்துல் தொழுகை நடத்தும்போது அதை அதிகாரி கள் ‘அசூயையாக’ அணுகுவதையும் காட்டிய விதம், “நாம் வேற - அவங்க வேற” எனப் பொதுப்புத்தியில் உருவாக்கப் பட்டிருக்கும் பிளவை அப்பட்டமாக்குகிறது. நாயகன் விக்ரம் பிரபு, தேர்ந்த உடல்மொழியால் ஏட்டய்யா கதிரவனாக மிளிர்கிறார். காவலர் பயிற்சிப் பள்ளியில் அவர் பேசும் வசனம் மிக முக்கியமானது: “போலீஸ் வேலைங்கறது வெறும் அதிகா ரம் மட்டுமில்ல, அது ஒரு பொறுப்பு.” அதி காரத்தின் இறுக்கமான முகத்தை நோக்கிப் பேசும் இத்தகைய வசனங்கள் இன்றைய காலத்தின் தேவை. அப்துல் ரவூஃபாக நடித்த அக்சய் குமார், கலையரசியாக வரும் அனிஷ்மா உள்ளிட்ட அனைத்துக் கலைஞர் களும் பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். ‘PAN INDIA’- அதாவது, இந்தியா முழு மைக்கும் எனும் பெயரில் கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் ‘நாயக பிம்ப’ குப்பை களுக்கு மத்தியில், ‘சிறை’ போன்ற கலைப் படைப்புகள் மானுடம் போற்றும் எளிய மனிதர்களுக்கான சினிமாவாகத் தனித்து நிற்கிறது.</p>
