முந்தய பக்கம்

சென்னை - கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்

8 Apr 2026, 5:30 am
சென்னை - கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்

சென்னை - கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்

கடலூர், ஏப். 7: "சென்னை - கடலூர் இடையேயான புதிய ரயில் பாதை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய திட்டங்களுக்கு எனது பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ். சந்திரசேகரன் தெரிவித்தார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் தொகுதி மக்களின் நீண்டகாலக் கனவுத் திட்டமான சென்னை - கடலூர் இடையேயான கிழக்குக் கடற்கரைச் சாலை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

கடலூர் மாவட்ட மக்களின் மிக முக்கியத் தேவையாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்தி, அதனை இப்பகுதி மக்களின் நலனுக்காக நிச்சயம் நிறைவேற்றுப் பாடுபடுவேன் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram