நீண்ட கால தேவைகளுக்கு முன்னுரிமை!
11 Apr 2026, 5:30 am

நீண்ட கால தேவைகளுக்கு முன்னுரிமை!

தருமபுரி, ஏப்.10- பொதுமக்களின் நீண்ட கால தேவைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளர் பழனியப்பன் உறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர் என்பது வெறும் பதவி அல்ல; அது உங்கள் உரிமைக் குரல். உங்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்தையும் முதன்மை பணிகளாக கொண்டு, உங்கள் குரலாய் சட்டமன்றத்தில் நான் ஒலிப்பேன். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த நான் என்றும் உங்களோடு இருப்பேன்.

இப்பகுதி மக்களின் நீண்ட காலத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன், என்றார். இந்நிகழ்வில், திமுக மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவகுரு, இலக்கிய அணி தலைவர் கோவை பு.புவியரசன், நிர்வாகி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி சண்முகம், ஒன்றியச் செயலாளர் மாது, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சரவணன், விசிக மாவட்டச் செயலாளர் வளர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.