நீட் சூதாட்டம் - முதலமைச்சர் வீதியில் இறங்கி போராட வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கோரிக்கை
19 Jun 2026, 12:24 am

நீட் சூதாட்டம் - முதலமைச்சர் வீதியில் இறங்கி போராட வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கோரிக்கை

கோவை, ஜூன் 18- நீட் தேர்வு என்பது தகுதிக்கா னது அல்ல, அது கார்ப்பரேட் நிறுவ னங்கள் நடத்தும் வணிக சூதாட் டம். இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப்போகிறோம், இந்த விப ரீதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கோரிக்கை விடுத்தார். கோவையில் நீட் வினாத்தாள் குளறுபடிகளால் மன உளைச்ச லுக்குள்ளாகி உயிரை மாய்த்துக் கொண்ட 19 வயது மாணவி அனு கீர்த்தனாவின் உடல் கோவைப் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாணவியின் உடலுக்கு, சிஐ டியு அகில இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையான், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சிபிஎம் மாவட்டச்செயலா ளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கனக ராஜ், வி.தெய்வேந்திரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின் னர், அனு கீர்த்தனாவின் தந்தை யும், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செய லாளர் செந்தில்பிரபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து, ஆத்துப் பாலம் மின் மயானத்தில் அனு கீர்த்தனாவின் இறுதி நிகழ்வு நடை பெற்றது. இதில், சிபிஎம் மேற்கு நகரச்செயலாளர் பி.சி.முருகன், சிஐடியு நிர்வாகிகள் ரத்தினகுமார், சந்திரன், ஜான் அந்தோணி ராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட டாஸ் மாக் ஊழியர்கள் மற்றும் சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியினர் திரளா னோர் இறுதி ஊர்வலகத்தில் பங் கேற்றனர்.

நீட் என்பது வணிகத்தின் சூதாட்டம்

முன்னதாக, மாணவியின் உட லுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, நீட் என்பது ஒரு தேர்வு முறையே கிடை யாது என பத்து ஆண்டுகாலமாக நாங்கள் கூறி வருகிறோம். மாண வர்களின் வயது, புரிதல் எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இது சந்தையின் சூழ்ச்சி; வணிகத்தின் சூதாட்டம். ‘கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் கல்வி முழுமையாக வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மூலம் தகுதியானவர் களை கண்டறியவும் முடிய வில்லை, வணிகமயமாவதை தடுக்கவும் முடியவில்லை. தோல் வியடைந்த இந்த நீட் தேர்வை திரும்பப் பெறவில்லை என்றால், நரேந்திர மோடி அரசு உடனடி யாக பதவி விலக வேண்டும். உலகில் எந்தவொரு நாட்டிலும் இளநிலைப் படிப்புக்கான நுழை வுத் தேர்வுக்கு ராணுவத்தின் உத வியை கோரியதில்லை. ஆனால், இங்கு ஹெலிகாப்டரில் வினாத் தாள் கொண்டு செல்லும் அள விற்கு சூதாட்டம் நடக்கிறது. அடுத் ததாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த திட்டமிடுகிறார்கள். எழுத் துத் தேர்வில் குளறுபடி நடந்தால் ஆதாரத்தோடு பிடிக்கலாம்; ஆனால் ஆன்லைனில் முறைகேடு நடந்தால் யாரென்று கண்டுபி டிக்கவே முடியாது. தனியார் கல் லூரிகளின் முறைகேடுகளை சட்டப்பூர்வமாகக் காப்பாற்றவே நீட் தேர்வு நடத்தப்படுகிறதே தவிர, இது மாணவர் நலன் சார்ந்தது அல்ல. மேலும், தமிழ்நாடு முதலமைச் சர் மக்கள் செல்வாக்கு பெற்றவரா என்பதை நிரூபிக்க இதுவே சரி யான தருணம். அன்று எம்.ஜி.ஆர் அரிசிக்காக தெருவில் இறங்கிப் போராடியதைப் போல, தற் போதைய முதலமைச்சரும் வீதி யில் இறங்கிப் போராட வேண்டும். தமிழகத்திற்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக் கக் கோரி புதிய மசோதாவை அனுப்ப வேண்டும். அந்த மசோ தாவை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீட் விலக்கு பெறும் வரை நான் உண்ணாவிர தம் இருப்பேன் என அறிவித்து முத லமைச்சர் விஜய் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அவர் உண்மையான மக்கள் பிரதிநிதி யாக கருதப்படுவார் என்றார்.