பிரதமர் கோவை வருகை: பலத்த பாதுகாப்பு
18 Nov 2025, 3:21 pm
<p><strong>பிரதமர் கோவை வருகை: பலத்த பாதுகாப்பு</strong></p>
<p>கோவை, நவ.18- கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச் சியில் பங்கேற்பதற்காக பிர தமர் மோடி வருகை தரும் நிலையில், மாவட்டம் முழு வதும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர். கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசா யிகள் மாநாடு நவ.19 (இன்று) முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மா நாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். பிரத மர் வருகையை முன்னிட்டு மாநகர் முழுவ தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் முக்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலணி, விமானநிலையம், பீளமேடு, சரவ ணம்பட்டி, காளப்பட்டி, கொடிசியா வளாகம், ராமநாதபுரம், பந்தய சாலை ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாகியுள்ளது. மேலும், இங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வரும் நேரத் தில் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங் கள் விமான நிலையம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு, இந்த வாகனங்கள் ஒண்டிப் புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், புத னன்று பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்திற்குள் வாகனங்கள் மற்றும் கால் டாக்சிகள் செல்ல தடை செய்யப் பட்டுள்ளதுடன், விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12 மணிக்கு முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 மணிக்கு மேல் வருபவர்கள் சிட்ரா சந்திப் பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்லவும் அறிவுறுத்தபட்டுள்ளது.</p>
