அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்</strong></p>
<p>மு.வீரபாண்டியன் வலியுறுத்தல் செங்கம், பிப். 15 இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் உண்மைத்தன்மை குறித்துப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். செங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்குவதையும், தமி ழர்களின் தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்களை அமைப்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகத் தெரி வித்தார். அதேசமயம், திண்டிவனம் - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்யப் பட்டால் உள்நாட்டு ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், நட்பு நாடான வெனிசுலாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்றார். மேலும், ராணுவ ரகசியங்களைக் காப்பதைக் காரணம் காட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளின் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒன்றிய அரசு நசுக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
