தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 Mar 2026, 4:03 pm

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும் தமிழக முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களிலும், வேப்பேரியில் பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். தனது பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள முதலமைச்சர், திமுக தமிழ்நாட்டை முதன்மை மாநில மாக்கி முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக் கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி-பினராயி விஜயன் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் வேண்டி வாழ்த்து தெரிவித் துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மக்கள் நலனுக்கான உறுதியான தலைமைத்துவத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கனிமொழி எம்.பி., த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், கமல்ஹாசன் எம்.பி., திரைக் கலைஞர் ரஜினி காந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.30 உயர்வு

சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரி பொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்க ளின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றிய மைக்கப்படுகிறது. ஞாயிறன்று வெளியான மார்ச் மாதத்திற்கான விலை பட்டியலில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண் டர் விலை ரூ.30 உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8 ஆயிரமாக உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றி தழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி பிறப்பித்துள்ள அரசாணையில், “தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றி தழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்ச வரம்பு கடந்த 1993 ஆம் ஆண்டு ரூ.1,000 ஆக இருந்தது. பின்னர், 2006 ஆம் ஆண்டில் இது ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சவரம்பை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குடும்ப ஓய்வூதியம், தனிப்பட்ட தொழில் வரு மானம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் வரும் மாத வருமானம் ரூ.8,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இதில் அடங்குவர். விவாகரத்து பெற்றவர்கள், ஆதரவற்ற விதவை பிரிவின்கீழ் வரமாட்டார்கள். அரசுப் பணிகளில் (பே லெவல் 10 வரை) பெண்களுக்கு ஒதுக்கப்படும் 30 சதவீத இடஒதுக் கீட்டில், 10 சதவீத இடங்கள் ஆதாவற்ற விதவைகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை தொடக்கம் சென்னை: தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை (மார்ச் 2) முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங் களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கணிச மாக உயர்த்த வேண்டும் எனவும் பள்ளி தலைமையாசிரியர் களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் வளைகுடா தமிழர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு

சென்னை: அமெ ரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அர சின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறி வுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளதாக முதல மைச்சர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். ஈரானைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளை குடா நாடுகளில் பதற்ற மான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியர்கள் பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டு நிலைமை தொ டர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. அவசர உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். புதுதில்லி கட்டுப்பாட்டு அறை: 011-24193300 (நிலைப்பேசி), 92895 16712 (வாட்ஸ்அப்), இந்தி யாவிற்குள்: 1800 309 3793 (கட்டணமில்லா), வெளிநாடு: +91 80 6900 9900 (மிஸ்டு கால்), தொ டர்புக்கு: +91 80 69009901.

ரயில் நிலைய திறப்பு விழாவில் குழப்பம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூர் நகரில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இந்நி கழ்ச்சியில், பிரதமர் நரேந் திர மோடி அதிகாரப்பூர்வ மாக திறந்து வைப்பதற்கு முன்பே நிகழ்ச்சி நடை முறையில் குழப்பம் ஏற்பட்டது. விழா நிறைவில் பாடப் பட வேண்டிய பாடல்கள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் பாடப்பட்டன. முத லில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதமான ஜன கண மன, அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிபரப்பப் பட்டன. பொதுவாக தேசிய கீதம் நிகழ்ச்சி முடிவில் பாடப்படுவது நடைமுறை யாக இருக்கும் நிலையில், தொடக்கத்திலேயே பாடப் பட்டதால் நிகழ்வில் பங் கேற்றவர்கள் குழப்ப மடைந்தனர்.

சென்னைக்கு விரைவில் புல்லட் ரயில் பிரதமர் அறிவிப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், “தமிழ கத்திற்கு 9 வந்தே பாரத் ரயில் வழங்கப்பட்டது. புதிதாக 77 ரயில் நிலை யங்கள் சீரமைக்கப்படு கின்றன. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட தால், 1,300 கி.மீ-க்கு அதிகமாக ரயில் பாதை கள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக உள் கட்டமைப்பிற்கு வழங்கப் படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்னை, ஹைதராபாத் - சென்னை இடையில் புல்லட் ரயில் திட்டங்கள் வர உள்ளன” என்றார்.