தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமரின் திருச்சி அறிவிப்புகள் மோசடியே! தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்

12 Mar 2026, 4:20 pm
பிரதமரின்  திருச்சி அறிவிப்புகள் மோசடியே!  தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்
<p><strong>பிரதமரின் &nbsp;திருச்சி அறிவிப்புகள் மோசடியே! &nbsp;தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்</strong></p> <p>சென்னை, மார்ச் 12 - &ldquo;திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜன நாயக கூட்டணி மாநாட்டில் பிரதமர் மோடி &nbsp;ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது, &nbsp;தேர்தலுக்கான வெற்றி அறிவிப்பே!&rdquo; என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மதுரை எய்ம்ஸ் இன்னும் நிறை வேறாததை சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மதுரை - கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி &nbsp;மறுத்துவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி, பிரதமர் மோடி பேசுவது வேடிக்கையானது என்று விமர்சித்துள்ளார். &nbsp;மதுரை மல்லி ஏற்றுமதி பற்றி பேசும் &nbsp;மோடி, இந்திய விவசாயிகளை வஞ்சிக்கும் நாசகர வர்த்தக உடன்பாட்டை அமெரிக்கா வுடன் மேற்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 3 மடங்கு நிதி: பொய்! &ldquo;கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டதாக மோடி கூறி யது வடிகட்டிய பொய்&rdquo; என்று சாடியிருக்கும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி &ldquo;அதற்கான ஆதாரம் காட்ட முடியுமா?&rdquo; என்றும் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். &ldquo;எளியோரை வஞ்சித்து கார்ப்பரேட்டு களுக்கு சாதகமாக செயல்படும் மோடி ஆட்சியை தமிழ்நாடு மக்கள் உரிய நேரத்தில் நிராகரிப்பார்கள்&rdquo; என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.