ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
19 Nov 2025, 3:33 pm
<p><strong>ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாமக்கல், நவ.19- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்க ளது கோரிக்கைகள் தொடர்பாக முறையிட, கொல்லி மலை வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து வாய்ப்பு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு, அரை சம்பள விடுப்பு தொடர்பான பணப்பலன்களை இனியும் காலம் தாழ்த்தாது விரைவாக வழங்க வேண்டும். ஆசிரியர்க ளின் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவதற்கு, உரிய பிரிவு அலுவலரின் வேலை சுணக்கத்தை தொடர்ந்து காரணம் காட்டி டாமல், உரிய பிரிவு அலுவலருக்கு பணித்திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விலையில்லா நலத்திட்ட பொருட்களை பள்ளிகளுக்கு சென்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லிமலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டாரத் தலைவர் பால சுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் செயலாளர் தமிழழகன் பேசினார். முடிவில், சரவணன் நன்றி கூறினார்.</p>
<p> </p>
