கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
6 Dec 2025, 2:48 pm

பின்னலாடை ரகங்கள் 5 % வரை விலை உயர்வு: சைமா அறிவிப்பு

திருப்பூர், டிச.5- 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பின்னலாடை ரகங்கள் 5% வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) தெரிவித்து உள் ளது. சைமா சிறப்பு கலந்தாய்வு கூட்டம், சங்க அலுவல கத்தில் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் சனி யன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 43B(எச்) சட்டத்தின்படி சப்ளையர்களுக்கு 45 நாட்களுக்குள் பில் தொகை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால், டிஸ்ட்ரிபியூட்டர்கள், மொத்த வியாபாரிகள், ஏஜென்ட்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் 45 நாட்களுக் குள் உற்பத்தியாளர்களுக்கு பில் தொகையை சரிவர கொடுப் பதில்லை. இதை சரி செய்வதற்கு இனிவரும் காலங்களில் அவர்களுக்கு 45 நாட்களுக்கு மேல் கடன் கொடுக்க இயலாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பனியன் பின்னலாடை உற்பத்தி துறையில் உயர்ந்து வரும் உற்பத்தி செலவினங்கள் மற்றும் சம்பள செல வினங்களை கருத்தில் கொண்டு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்க ளின் உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு உற்பத்தி மற்றும் சம்பள செலவினங்களை கருத்தில் கொண்டு 3 சதவீதம் முதல் 5 சத வீதம் வரை உயர்த்திக் கொள்வது, வாரா கடன்களால் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடை நிறுவனங்களின் நலன் காக்க பிளாக் லிஸ்ட் உருவாக்குவது என்றும் அதற்கு சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசனை செய்து அதன்படி அமல்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் 2026 ஜன.1 இல் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற முடிவு

திருப்பூர், டிச. 6 – திருப்பூர் மாநகரில் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு சட்டப்படி அபராதம் உள்ளிட்ட கடும் நட வடிக்கை எடுக்கப்படும், 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டி ருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து மாநகர மேயர் ந.தி னேஷ்குமார், மாநகர ஆணையர் எம்.பி. அமித் ஆகியோர் சனியன்று விடுத் துள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி யில் “நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” மூலம் 100% குப்பையை தரம் பிரித்த மாநகராட்சி என்ற இலக்கை அடையத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாநக ராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநகராக மாற்ற 60 வார்டுகளுக்கு உட் பட்ட பகுதிகளில், அரசால் தடைசெய் யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வீசி எறியும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும், அதற்கு மாற்றாக “மீண்டும் மஞ்சப்பை” திட்டத் தின் கீழ், மாற்று பொருட்களை பயன்ப டுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்படுகிறது. 6 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் அழிப்பு டிசம்பர் 4 வியாழனன்று இம்மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துணை ஆணையர் ரா.மகேஸ்வரி தலைமை யில் பொது சுகாதாரப்பிரிவு அலுவ லர்கள் கடைகளில் ஆய்வு மேற் கொண்டு, இந்த நெகிழிப் பொருட்களை விற்கும் கடைகளிலிருந்து சுமார் 6 மெ.டன் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட் டது. அவை உடனடியாக பொங்குபா ளையத்தில் உள்ள நிறுவனம் மூலம் அழிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப் படும். தடை செய்யப்பட்ட நெகிழிகள் நெகிழிப் பொருட்களான, உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், தெர்மக்கோல் தட்டு கள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், உணவு மேஜை யின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவ ளைகள், உறிஞ்சு குழாய்கள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள், தூக்கு பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி னால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மாற்றுப் பொருட்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி/ உலோ கத்தால் ஆன குவளைகள், அலுமினி யத்தாள், தாமரை இலை, மூங்கில் / மரம் / மண்பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித / துணி கொடிகள், உண்ணக்கூடிய தேக்கரண்டிகள், மஞ் சப்பை (துணிப்பை) / காகிதம் / சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள் மற்றும் மண் குவளைகள் ஆகியவற்றை பயன் படுத்த வேண்டும். மேலும், திருப்பூர் மாநகராட்சியை 2026 ஜனவரி 1ஆம் தேதியன்று “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநகராட்சியாக” மாற்ற நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். மாநகர பகுதிகளில் தடைசெய்யப் பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாடு குறித்து 155304, 1800 425-7023, 0421 2321 500 என்ற இலவச எண்ணில் புகார் தெரி விக்கும்படி கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் தடுக்க வலியுறுத்தல்

உடுமலை, டிச.6- சாலையோரத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வாக னங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. இதைத் தடுக்க காவல்துறை மற்றும் கொமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட்சி உடு மலை பழனி, மடத்துக்குளம் மற்றும் ஆனைமலைக்கு செல் லும் முக்கிய சாலை. இப்பகுதி மக்கள் தங்களுடைய அவசர தேவைகளுக்கு பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைக ளுக்கு கொமரலிங்ககம் பேருந்து நிறுத்தப் பகுதிக்குத்தான் வர வேண்டும். இந்நிலையில் இங்கு வரும் மக்களுக்கு ஏற்க னவே இருக்கும் பாதையோர ஆக்கிரமிப்புகளால் பொருட் கள் வாங்க கடைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் செல்லும் வாகனங்களை நிறுத்தும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . அரசு நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், சாலை விரிவாக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வீடில்லா ஏழைகளுக்கு பட்டா கோரி ஜன.3 ல் போராட்டம் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்

உடுமலை, டிச.6 - மடத்துக்குளம் தாலுகாவில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு இலவச பட்டாவும், அதில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டித்தரவும் வலியு றுத்தி ஜனவரி 3 ஆம் தேதி மடத்துக் குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதென அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மடத்துக்குளம் தாலுகா மாநாடு சனியன்று கணியூரில் எம். காந்தி நினைவரங்கத்தில் (ஜோதி கோவில் வளாகம்) நடைபெற்றது. சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மடத்துக்குளம் தாலுகாவில் வசிக் கும் வீடில்லாத அனைத்து மக்களுக் கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கணியூர், மடத்துக்குளம் மற்றும் சங்கர மநல்லூர் பேரூராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்க ளுக்கு சிறு, குறு தொழில்கள் செய்ய வும், கால்நடை வளர்க்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், தினசரி சம்பளம் ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவ சாய தொழிலாளர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண் டும். மேலும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், கல்வி உதவி தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். தேசிய அளவில் விவ சாய தொழிலாளர்களுக்கு ஒருங்கி ணைந்த மத்திய சட்டமும், தனித்து றையும் உருவாக்க வேண்டும். கொம ரலிங்கம் பேரூராட்சியில் ஏழை மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு: மடத்துக்குளம் தாலுகா தலைவ ராக மாசானம், செயலாளராக ஆறு முகம், பொருளாளராக வேடப்பட்டி ஈஸ்வரன், துணை தலைவர்களாக ஈஸ்வரன், சைலாவதி, துணைச் செயலாளராக வடிவேல், பாலசுப்பி ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு கட்டுமான சங்கத்தின் தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில துணைத் தலைவர் வசந்தாமணி நிறைவுரை ஆற்றி னார். துணை தலைவர் பாலசுப்பி ரமணியம் நன்றி கூறினார்.

நாளை மின்தடை உடுமலை, டிச.6- இந்திரநகர் துணைமின் நிலையத்தில் பராபரிப்பு பணிகள் நடைபெறுவதால், 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை மின்நகர், இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜா வூர், ஆவல்குட்டை, சேரன்ந கர், குமாரமங்கலம், தாந் தோனி, வெங்கிட்டாபுரம், இராமேகவுண்டன்புதூர், துங்காவி, மெட்ராத்தி, போள ரப்பட்டி மற்றும் கே.கே. புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.