தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டையைப் போடும் விலைவாசி உயர்வு! - அ.அன்வர் உசேன்

16 Jun 2026, 9:15 pm
குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டையைப் போடும் விலைவாசி உயர்வு! - அ.அன்வர் உசேன்

குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டையைப் போடும் விலைவாசி உயர்வு!

ஈரான் போரைத் தொடர்ந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த முக்கிய எரிபொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும், போதுமான அளவு சேமிக்கவும் மோடி அரசாங்கம் தவறியதால் சங்கிலித் தொடராக உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், அதற்கு இணை யாக உழைக்கும் மக்களின் ஊதியம் உயர வில்லை. இது சாதாரண குடும்ப பட்ஜெட்டில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தி, கடும் துன்பங்களை விளைவித்து வருகிறது.

தற்போது சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதமும், பால் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்ந்துள்ளன. மும்பை போன்ற பெருநகரங்களில் சாதாரண மக்களின் சப்பாத்தி உணவு விலை 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சாதாரண குடும்பத்தின் மாதாந்தர பட்ஜெட் 6 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அண்மைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முன்பாகவே, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அத்தியாவசியச் செலவுகள் பின்வருமாறு உயர்ந்துள்ளன:

உணவு – 4.2% Jதுணி மற்றும் காலணிகள் – 2.8%

கல்வி – 3.15% Jஉணவகங்கள் – 4.2%

மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு – 17.66%

விலையை நேரடியாக உயர்த்த முடியாத சில நிறுவனங்கள், பொருள்களின் எடையைக் குறைக்கும் தந்திரத்தைக் கையாள்கின்றன. உதாரணமாக, 5 ரூபாய் விலையுள்ள பிஸ்கட் க்கெட்டின் எடை 50 கிராமிலிருந்து 45 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சங்கிலித் தொடர் விளைவும் ‘ஆத்மநிர்பார்’ அவலமும்

கடந்த இரு மாதங்களில் சமையல் எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வணிகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவுக்குச் சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் தமது எண்ணெய் இருப்பின் ஒரு பகுதியை ‘பயோ டீசல்’ தயாரிக்கப் பயன்படுத்துவதே இதற்கு முக்கியக் காரணம்.

நமது நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 50 முதல் 60 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்வதால், இந்த உலகளாவிய மாற்றம் இந்திய சந்தையைக் கடுமையாகப் பாதிக்கிறது. சமையல் எண்ணெய்யிலும் ‘ஆத்மநிர்பார்’ (சுயசார்பு) என்பது ஒன்றிய அரசின் “வாயால் சுட்ட வடையாகவே” அமைந்துவிட்டது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்க ளில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மென்பொருள் ஊழியர்கள் உணவகங்களை யே நம்பியுள்ளனர். மார்ச் 2026 மற்றும் மே 2026 ஆகிய இரு மாத இடைவெளிக்குள் உணவகங்களில் விலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது:

உணவகங்களின் விலை உயர்வுப் பட்டியல் (ரூபாயில்): விடாது கருப்பாகத் துரத்தும் கூடுதல் செலவுகள்

உணவகங்களின் இந்த விலையேற்ற;j திற்கு வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வுதான் முக்கியக் காரணம். சுமார் 1,500 ரூபாய்க்குக் கிடைத்த எரிவாயு உருளை இன்று 3,000 ரூபாய் வரையும், வெளிச்சந்தையில் 4,000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இதனால் பல சிறு உணவ கங்கள் மூடப்பட்டுவிட்டன.

இதனைத் தாக்குப் பிடிக்கச் சில உணவகங்கள் விறகுப் பயன்பாட்டுக்கு மாறினாலும், அங்கேயும் பிரச்சனை துரத்து கிறது. சீமைக் கருவேலம் விறகின் விலை 1 கிலோ 60 ரூபாயிலிருந்து 130 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தவிடு, 30 கிலோ கொண்ட ஒரு பை 240 ரூபாயிலிருந்து 280 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது புலம்பெயர் உழைப்பா ளர்கள் மற்றும் சாதாரண மக்களின் உணவு பட்ஜெட்டைப் பெரிதும் பாதித்துள்ளது.

உணவு வகை சாலையோர உணவகம் (மார்ச் / மே) நடுத்தர உணவகம் (மார்ச் / மே) பெரிய உணவகம் (மார்ச் / மே)

தோசை 50 / 70 100 / 150 160 / 190

2 இட்லி 10 / 40 30 / 50 60 / 90

பரோட்டா 10 / 25 15 / 20 30 / 50

2 பூரி 20 / 50 80 / 140 100 / 150

சைவ பிரியாணி 60 / 100 70 / 180 230 / 280

அசைவ பிரியாணி 100 / 120 200 / 290 350 / 450

மறுபுறத்தில், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் கிக் தொழிலாளர்களும் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தங்களின் சொந்த உணவுத் தேவைக்கும், இரு சக்கர வாகன எரிபொருளுக்கும் அவர்கள் கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், டெலிவரி கட்டணத்தை உயர்த்தி னால் வணிகம் குறையும் என நிறுவ னங்கள் அவர்களின் வருமானத்தை உயர்த்து வதில்லை. இந்த நெருக்கடியிலும் நிறுவ னங்கள் தங்களின் கொள்ளை லாபத்தைக் குறைக்கத் தயாராக இல்லை.

இவ்வாறாக, அனைத்து அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து வருகிறது. போர் நீடிக்கும் சூழலில் இப்பிரச்சனை மேலும் தீவிரமடையும் என்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

(தகவல்கள்: தி இந்து, நுகர்வோர் விவகார அமைச்சகம்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.