அமெரிக்க அடாவடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தடுப்பதா? அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்திடுக!
10 Jan 2026, 2:48 pm

அமெரிக்க அடாவடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தடுப்பதா? அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்திடுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்! சென்னை, ஜன. 10 - அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடக்குமுறை யைக் கட்டவிழ்த்து விட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: உலகெங்கிலும் வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் இறையாண்மை மிக்க வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது இணை யரை, அமெரிக்க ராணுவம் வெனிசுலாவிற்கு உள்ளேயே புகுந்து கடத்திச் சென்றதுடன், தற்போது சிறையிலும் அடைத்துள்ளது. அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்பின் இத்தகைய நடவ டிக்கையை எதிர்த்து அமெரிக்காவிலும், உல கெங்கிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போ ராடிக் கொண்டிருக்கின்றனர். சென்னையில், ஜனவரி 5 அன்று அமெ ரிக்க தூதரகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுமதி கோரியிருந்தோம். மாவட்டச் செயலாளர் உட்பட தோழர்கள் மீது அடக்குமுறை அதன்படி ஜனவரி 5 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தோழர்கள் ஒன்று சேர ஆரம்பித்தவுடன், காவல்துறையின் துணை ஆணையர் தலைமையில் சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த தோழர் களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாக னத்தில் ஏற்றியுள்ளனர். கட்சியின் மாவட்டச் செயலாளரை, சட்டையைப் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் தலை இடிபடும் வகையில் பலவந்தமாக ஏற்றியுள்ளனர். பல தோழர்களை கைகளால் குத்தியும், கால்களால் மிதித்தும் அடித்து ஏற்றியுள்ளனர். வாகனத்தில் அலைக்கழிப்பு; தலைவர்கள் மீது பொய்வழக்கு ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பே நான்கு வாகனங்களில் ஏற்றப்பட்ட தோழர்கள் அண்ணா சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை காவல்துறை வாகனத்தில் அலைக் கழிக்கப்பட்டனர். மூன்று மணி நேரம் வாக னத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு பின்னர் ராயப் பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு மதியம் ஒரு மணிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோன்று, ஜனவரி 6 அன்று அமெரிக்க அரசை கண்டித்து காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும் காவல்துறை பலவந்தமாக கைது செய்துள்ளது. இதேபோன்று தரமணி யில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட தோழர்களையும் காவல்துறை கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், தலை வர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்கும் புனையப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளை காவல்துறை பறிப்பதா? காவல்துறையின் இத்தகைய நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கத்தைக் கண்டித்து சென்னையில் அதன் தூதரகம் அருகில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வந்திருக் கின்றன. ஆனால், சமீப காலமாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை மாநகர காவல்துறை முடிவெடுத்து அராஜக மாக நடந்து வருகிறது. ஜனநாயக உரிமை களை எப்படி செயலாக்க வேண்டும் என்பதை சென்னை மாநகர காவல்துறை மட்டுமே தீர்மா னிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும்! எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும், வரும் காலங்களில் சட்டப்படி அனுமதிக்கப் பட்ட உரிமைகளை ஒடுக்கும் முறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சமீப காலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடு களின் மீது தண்டனை வரி விதிப்பது உள்பட ராணுவத் தலையீடுகளையும் நடத்திவரும் நிலையில், அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்த பொருத்தமான ஒரு இடத்தை ஒதுக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கைரேகை நிபந்தனையைத் தளர்த்தி பொங்கல் தொகுப்பை வழங்குக!

குடும்ப அட்டைதாரர்களி டம் கையெழுத்து பெற்றுக் கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. “தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன் னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை இணைந்து ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த பொங்கல் தொகுப்பை, குடும்ப அட்டை தாரர்களின் கைரேகையை கையடக்க மின்னணு கணினி (POS) மூலம் பதிவு செய்து வழங்க வேண்டி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணி நடை பெறுவதால் இணையதள சேவை முழுமையாக கிடைப் பதில் தடங்கல் உள்ளது. அதன்காரணமாகவே கை ரேகை பெறுவதில் காலதாம தம் ஆகிறது. ஒரு குடும்ப அட்டைதாரருக்கு குறைந்த பட்சம் 15 நிமிடத்திற்கு மேல் ஆகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளா கின்றனர். எனவே, இதனை துரிதப் படுத்த இணைய சேவைத் திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பக் கோளாறு களை உடனடியாக சரி செய்ய வும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இத்திட்டத் தினை விரைந்து அமலாக்க குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் தொகுப்பை வழங்குவதற் கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக திட்டமிட வேண் டும்” என்று தீர்மானத்தில், தமிழ்நாடு அரசை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.