தீக்கதிர் விரைவு செய்திகள்
27 Dec 2025, 12:15 pm

ஜனாதிபதி முர்மு நீர்மூழ்கிக் கப்பலில் இன்று பயணம்

புதுதில்லி, டிச. 27 - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க் கண்ட் ஆகிய 3 மாநிலங்க ளில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள் ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 28 அன்று கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் கடலில் பயணிக்க உள்ளார்.

பிப்.17-இல் இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை, டிச.27- இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி மாநிலம் முழுவதும் வாக்கா ளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த டிசம் பர் 19 அன்று வரைவு வாக் காளர் பட்டியல் வெளியா னது. அதன்பின் ஜனவரி 18 வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலிக்கப் பட உள்ளன. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர் கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பிப்ரவரி 17 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்தது!

சென்னை, டிச.27- சென்னையில் ஆபர ணத் தங்கத்தின் விலை, சனிக் கிழமையன்று பவு னுக்கு ரூ. 880 உயா்ந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்நிலை யில், தங்கத்துக்குப் போட்டி யாக வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 உய ர்ந்து ரூ. 2.74 லட்சத்துக்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.48 ஆயிரம் உயர்ந்துள்ளது.