வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அதிபர் மதுரோவை கைது
6 Jan 2026, 4:23 pm
<p>வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அதிபர் மதுரோவை கைது செய்த அமெரிக் காவை கண்டித்து செவ்வாயன்று பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சா. பிரவீன் குமார், மூத்த தலைவர் காஜா ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மோகன், பரிமளா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
