தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘இனவாதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப உறுதி’ யாழ்ப்பாணம் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க!

17 Jan 2026, 2:42 pm
‘இனவாதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப உறுதி’ யாழ்ப்பாணம் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க!
<p><strong>&lsquo;இனவாதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப உறுதி&rsquo; யாழ்ப்பாணம் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க!</strong></p> <p>யாழ்ப்பாணம், ஜன.17- யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற விழாவில், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க பங்கேற்று பொங்கலிட்டு மகிழ்ந்தார். இந்தச் செய்தியை, தமது &nbsp;சமூகவலைதளப் பக்கத்தி லும் அனுர குமார திஸா நாயக்க பதிவிட்டுள்ளார். அதில், &ldquo;யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் வியாழனன்று (ஜன. 15) பிற்பகல் நடை பெற்ற வட மாகாண தைப் &nbsp;பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாச்சார தின மான தைப் பொங்கல் விழா வில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது&rdquo; என்று &nbsp;குறிப்பிட்டுள்ளார். &ldquo;எந்த மொழியைப் பேசி னாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத் துக் குடிமக்களும், கவுர வத்துடன் வாழக்கூடிய இன வாதமற்ற, தேசிய ஒருமைப் பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்&rdquo; &nbsp;என விழாவில் பேசியதாக வும், &ldquo;ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வும் ஒவ்வொரு கலாச்சா ரத்தையும் மதித்து ஏற்றுக் &nbsp;கொள்வது முக்கியம்&rdquo; என்ற &nbsp;புரிதலை உணர்த்தியதாக வும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வர லாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்ததை சுட்டிக்காட்டியதாகவும் கூறி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.