பாலர் பூங்கா தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு உதயமானது குழந்தைகளுக்கான கோரிக்கை சாசனம் சமர்ப்பிக்க முடிவு!
17 Mar 2026, 3:26 pm
<p><strong>பாலர் பூங்கா தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு உதயமானது குழந்தைகளுக்கான கோரிக்கை சாசனம் சமர்ப்பிக்க முடிவு!</strong></p>
<p>சேலம், மார்ச் 17 - “குழந்தைகளிடையே வேற்றுமையற்ற உலகத்தை கட்டமைப்போம்” என்ற உய ரிய இலட்சியத்துடன், பாலர் பூங்கா அமைப்பின் தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு சேலத்தில் நடைபெற்ற எழுச்சியான கூட்டத்தில் உதயமானது. தமிழகம் முழுவது மிருந்து 37 உறுப்பினர் களைக் கொண்டு இந்த மாநில அமைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வேர்விட்டு வளரும் பாலர் பூங்கா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்க னவே பாலர் பூங்காவின் கிளைகள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது மாநிலம் முழு வதும் 850-க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாக்கப் பட்டுள்ளன. 4 வயது முதல் 13 வயது வரையிலான குழந் தைகளை அரவணைத்து, அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஆடல், பாடல் மற்றும் விளையாட்டு என மாதந்தோறும் கொண்டாட்டமான கிளைக் கூட்டங்களை பாலர் பூங்கா நடத்தி வருகிறது. காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களின் பிறந்தநாளை ‘மக்கள் ஒற்று மை தினமாக’ கொண்டாடி வரும் இவ்வியக்கம், மனிதா பிமானத்தைக் காப்பதிலும் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, ஈரான்-இஸ்ரேல் போரில் அப்பாவி குழந்தை கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், “போர்கள் வேண்டாம்” என வலி யுறுத்தியும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர் வலங்களை மாநிலம் முழு வதும் பாலர் பூங்கா முன்னெடுத்து வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி வழிகாட்டுதல் புதிதாக அமைக்கப் பட்டுள்ள மாநில அமைப்புக் குழு கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி கலந்துகொண்டு உரை ஆற்றினார். “குழந்தை களிடையே எவ்வித பாகு பாடும் இல்லாத உலகத்தைப் படைப்பதே பாலர் பூங்காவின் நோக்கம். அவர்களின் படைப்பாற்ற லை வளர்க்கும் கலைகளை யும் விளையாட்டுகளையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான தலை முறையை நாம் உருவாக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். புதிய நிர்வாகிகள் தீர்மானங்கள் மாநில அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வாலன்டினா வாழ்த்துரை வழங்கினார். புதிய அமைப்புக்குழுவின் ஒருங்கி ணைப்பாளராக என். அமிர்தம் தேர்ந்தெடுக்கப் பட்டார். இக்கூட்டத்தில் உணர்ச்சிகரமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன: கோரிக்கை சாசனம்: தேர்தலையொட்டி குழந்தை களுக்கான உரிமைகளை வலியுறுத்தி “குழந்தை களுக்கான கோரிக்கை சாச னம்” ஒன்றைத் தயாரித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்: குழந்தைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய மற்றும் வலிமையான சட்டம் தேவை என இக்குழு வலியுறுத்தியுள்ளது. போருக்குக் கண்டனம்: ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கப் போரில் குழந்தைகளைக் குறி வைத்துத் தாக்கி 160-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆரோக்கிய விழிப்புணர்வு: குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து மாநில அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொண்டது. குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும் ஒரு அமைதியான உலகைப் படைக்க, பாலர் பூங்கா தமிழகத்தில் ஒரு புதிய அறிவுசார் பயணத்தை தொடங்கியுள்ளது.</p>
