தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்ய ஜன.20இல் தயாரிப்பு மாநாடு

12 Jan 2026, 6:20 pm
பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்ய ஜன.20இல் தயாரிப்பு மாநாடு
<p><strong>பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்ய ஜன.20இல் தயாரிப்பு மாநாடு</strong></p> <p>திருப்பூர், ஜன. 12 &ndash; ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் தொழிலா ளர், விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு &nbsp;எதிராக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் &nbsp;நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை &nbsp;திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வ தற்கு ஜனவரி 20 ஆம் தேதி திருப்பூரில் ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் திங்களன்று அனைத்து தொழிற் சங்கம் மற்றும் எஸ்கேஎம் விவசாயிகள் சங் கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் தலைமை ஏற்றார். சிஐடியு &nbsp;மாவட்டத்துணைத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி. ஆர்.நடராஜன், மாநிலச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் செயலாளர் ரங்கசாமி, மகேஷ், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, ஐஎன்டியுசி செயலாளர் வி.ஆர். ஈஸ்வரன், எஸ்கேஎம் விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், விவசாயிகள் சங்க நிர்வாகி கேசவன், எம்எல் எப் பனியன் சங்கச் செயலாளர் வெங்கடா சலம், ஏஐசிசிடியு மாநிலக்குழு உறுப்பினர் முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தொழிலாளர்கள் உரிமையைப் பறிக்கும் &nbsp;நான்கு சட்டத் தொகுப்புகளை அமலாக்கி யது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறு தித்திட்டத்தை சீர்குலைத்து கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்திருப்பது, காப்பீட்டு துறையில் 100 &nbsp;நூறு சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி &nbsp;என அடுத்தடுத்து தொழிலாளர், விவசாயி கள், மக்கள் விரோதக் கொள்கைகளை பார திய ஜனதா அரசு கண்மூடித்தனமாக அம லாக்கி வருவதைக் கண்டித்து பிப்ரவரி 12ஆம் &nbsp;தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் &nbsp;நடத்துவது என்று மத்தியத் தொழிற்சங்கங் கள் மற்றும் எஸ்கேஎம் விவசாயிகள் சங்கங் கள் அழைப்பு விடுத்துள்ளன. இதன்படி பிப்ரவரி 12ஆம் தேதி திருப்பூர், &nbsp;அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபு ரம், உடுமலை, பல்லடம் ஆகிய ஏழு மையங் களில் போக்குவரத்து, மின்சாரம், தொலைத் &nbsp;தொடர்பு, பனியன் மற்றும் விசைத்தறி உள் ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் வேலை &nbsp;நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது. அன்று ஏழு மையங்களில் நடைபெறும் மறி யல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பது. ஜனவரி 20ஆம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருப்பூர் கே.எஸ்ஆர். மண்ட பத்தில் அனைத்து சங்கங்களின் மாவட்ட நிர் வாகிகள், முன்னணி ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வேலை நிறுத்தத் தயாரிப்பு மாநாட்டை நடத்துவது, ஜனவரி 23ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில வேலை நிறுத்த தயாரிப்பு மாநாட் டிற்கு அனைத்து சங்கங்களில் இருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வரும் 19ஆம் தேதிக்குள் மாவட்டத்தில், தாலுகா வாரியாக பனியன், கட்டுமானம், முறைசாரா உள்ளிட்ட துறைவாரியான சங் கங்களின் கூட்டுக் கூட்டங்களை நடத்து வது, ஒன்றிய, மாநில அரசு ஊழியர் சங்கங்க ளின் கூட்டங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கூட்டங்க ளையும் நடத்தி முடித்து வேலை நிறுத்தத் திற்கு தயாரிப்பு செய்வது என்றும் தீர்மா னிக்கப்பட்டது. பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்திற்காக சட் டப்படி வேலை நிறுத்த அறிவிக்கை (நோட் டீஸ்) ஜனவரி 22 அன்று அணிதிரட்டப்பட்ட, முறைசாரா மற்றும் தொழிலாளர் துறை, காவல் துறை, அரசு நிர்வாகங்கள் உள்பட அனைத்து அரசுத் துறைகளுக்கும், அனைத்து தொழிற்சாலைகளுக்கும் வழங் குவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.