திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!</strong></p>
<p>சென்னை, ஏப். 2 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரே மலதா விஜயகாந்த், திருத்தணியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது, “திருத்தணி மக்க ளின் அன்பும் ஆதரவும் எனக்கு பெரும் உற்சாகம் தருகிறது. இந்த முறை நிச்சயம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும்” என்று அவர் கூறினார். ஏப்ரல் 2 அன்று ஆலந்தூர் தொகு தியில் போட்டியிடும் அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு வாக்கு கள் கோரி பரப்புரை மேற்கொண்ட அவர், “மக்கள் மாற்றத்தை விரும்பு கிறார்கள். எளிய மக்களின் குர லாக, கேப்டன் காட்டிய பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்கிறோம்” என்று தெரிவித்தார். பல்லாவரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன், குன்றத்தூரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும், தாம்பரம் தொகுதி திமுக வேட்பா ளர் மருத்துவர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி ஆகியோருக்கும் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஏ. பாக்கி யம், ஆலந்தூர் பகுதி செயலாளர் கே.வி. சிவகுமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம். தாமு, தாம்பரம் பகுதிச் செயலாளர் தா. கிருஷ்ணா, மதிமுக மாவட்டச் செயலாளர் மாவை. மகேந்திரன் உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
