தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டவிரோத கருக்கலைப்பின் போது கர்ப்பிணி உயிரிழப்பு

12 Dec 2025, 4:54 pm
சட்டவிரோத கருக்கலைப்பின் போது கர்ப்பிணி உயிரிழப்பு
<p><strong>சட்டவிரோத கருக்கலைப்பின் போது கர்ப்பிணி உயிரிழப்பு</strong></p> <p>தருமபுரி, டிச.12- ஏரியூர் அருகே சட்டவிரோத கருக்கலைப்பின் போது, கர்ப்பிணி உயிரிழந்த வழக்கில், கணவர் உட் பட 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள பூச்சூரைச் சேர்ந்த வர் கண்ணன். இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு 8 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதனி டையே, கடந்த டிச.1 ஆம் தேதி ரம்யா மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப &nbsp;வைத்துள்ளார். ஆனால், ரம்யா வின் உயிரிழப்பில் சந்தேகம் இருப் பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் காவல் நிலையத்தில் புகாரளித்த னர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். அதில், ரம்யாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், அவரது கணவர் கண்ணன் சட்ட &nbsp;விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ள முயற் சித்துள்ளார். அதன்படி சேலம் &nbsp;மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த &nbsp;செவிலியர் சுகன்யா (35), இடைத் தரகர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யா வுக்கு பரிசோதனை நடத்த திட்ட மிட்டுள்ளார். இதையடுத்து 3 ஆவது மாதம் என்பதால் வழக்கம் போல் &nbsp;தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம் யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்ட தில், அவருக்கு 3 ஆவதும் பெண் குழந்தை என்பதை சுகன்யா உறு திப்படுத்தி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுகன்யா, வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யா விற்கு வீட்டில் வைத்து கருக்க லைப்பு செய்திட கண்ணன் திட்ட மிட்டுள்ளார். அதன்படி வீட்டில் &nbsp;கருக்கலைப்பின்போது ரம்யா விற்கு அதிகளவில் ரத்தப்போக்கு &nbsp;ஏற்பட்டதால் சேலம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக கோவை யிலுள்ள தனியார் மருத்துவம னைக்கு அனுப்பிய போது, செல் லும் வழியிலேயே ரம்யா உயிரி ழந்தது தெரியவந்தது. இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்த போலீ சார், சட்டவிரோதமாக கருக்க லைப்பு செய்த வழக்கில் ரம்யாவின் கணவர் கண்ணன், செவிலியர் சுகன்யா, இடைத்தரகர் வனிதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை &nbsp;பரிசோதித்து அறிவிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக கைது நட வடிக்கைகள் நடைபெற்றாலும், சட்டவிரோத செயல் நடந்த வண் ணம் உள்ளது. எனவே, இப்பிரச்ச னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை &nbsp;எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.