தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

19 Jun 2026, 10:42 pm
தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 19- தவறான மகப்பேறு அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரி ழந்த புகாரில், 2 ஆண்டுகள் கடந் தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய மறுப்பதாக பெற்றோர் குற் றஞ்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மொடச் சூர், சுண்டப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது உறவி னர் வளர்மதி ஆகியோர் வியாழ னன்று ஈரோடு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் ஸ்ருதியிடம் வியாழனன்று மனு அளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் சக்திவேல் கூறுகையில், எனது மகள் மைதிலி (27), இரண்டாவது மகப்பேறு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில், கடந்த 2024 டிச.29 ஆம் தேதி அனுமதித் தோம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட் டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

எனது மகள் இறப்புக்கு கோபி அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியரின் தவறான சிகிச்சைதான் காரணம். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய் யக்கோரி எனது மகள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டோம்.

அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் கட் டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் சடலத்தை பெற்று அடக்கம் செய்யு மாறும், அரசு சார்பில் நல உதவி களையும் வாங்கித் தருகிறோம் என வும் உறுதி அளித்தனர்.

ஆனால், வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத் தில் விசாரணை அறிக்கையை போலீசார் சமர்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சம்பந் தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று முறையிட்டும், காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டால், காவல் ஆய்வாளர்கள் மாறிக்கொண்டே உள்ளனர். இப்பிரச்சனை மருத்துவ கவுன்சிலுக்கு சென்று ஆய்வு செய்துதான் வரும் என தெரிவிக் கின்றனர். தாயை இழந்த குழந்தை களுக்கு அரசு சார்பில் இதுவரை எவ்வித உதவியும் செய்து தரப் படவில்லை.

எனவே, நீதிமன்றத் தில் என் மகள் இறப்பு வழக்கு தொடர்பான விசாரணை அறிக் கையை போலீஸார் விரைவாக தாக்கல் செய்யவும், அரசு உதவி களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.