கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 Dec 2025, 6:14 pm

கருவுற்றிருந்த யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

உதகை, டிச.25- தெங்குமரஹாடா வனத்தில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகம், தெங்குமரஹாடா அருகே பூச்சப்பள்ளம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் புதனன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்ததை பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவயிடத் திற்கு வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் உதகை வனப்பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர், தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் மைய அலுவலர் நந்தகுமார், கல்லாம் பாளையம் வனக்குழு தலைவர் மற் றும் வனப்பணியாளர்கள் வந்தனர். இதன்பின் யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. இறந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்க லாம் என்றும், யானை கருவுற்றிருந்தது என்பதும், குட்டி ஈனும் போது ஏற்பட்ட பாதிப்பினால் இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட் டது. அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறப்பிற்கான காரணத்தை உறு தியாக கூற இயலும் என வனக்கால் நடை மருத்துவர் தெரிவித்தார்.

பிஏபி முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை

திருப்பூர், டிச.25 - பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப் புப் பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில், திட்டக்குழு தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் முன்னிலையில் முதலாம் மண்டல தண்ணீர் திறப்பிற்கான ஆலோசனைக் கூட்டம் வியா ழனன்று நடைபெற்றது. இதில் பிஏபி 4 ஆம் மண்டல பாசனம் நிறைவு பெற்று இன்று (வியாழன்) திருமூர்த்தி அணை அடைக்கப் படுகிறது. முதலாம் மண்டலத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான அரசாணை பெற, அரசுக்கு கருத்துரு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.

கடத்தி வந்த டிரோன்கள் பறிமுதல்

கோவை, டிச.25- கோவை விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக கடத்தி வந்த ரூ 1.15 கோடி மதிப்பிலான உயர்ரக டிரோன்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக உயர்ரக ட்ரோன்கள் கடத்தி வரப் படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வியாழனன்று சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை அடிப்படையில், சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 ட்ரோன்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்து

ஈரோடு, டிச.25- பவானி அருகே சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு லாரி புதனன்று அதிகாலை சென்று கொண்டி ருந்தது. லாரியை கௌடஹள்ளியைச் சேர்ந்த ரஷருல்லா (40) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்தியூர் - பவானி சாலையில் காடையம்பட்டி பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராமல் சாலையின் நடுவி லிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி விபத்துக் குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர் ரஷருல்லா- விற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, நெல் மூட்டைகள் மற்றொரு லாரி யில் ஏற்றப்பட்டு, மீட்பு வாகனம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

ஆயுதங்களுடன் தாக்குதல்: பாஜக இளைஞர் அணி செயலாளர் உள்பட 9 பேர் கைது

கோவை, டிச. 25- பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே நடைபெற்ற மது விருந்தின் போது ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, தனி யார் நிறுவன ஊழியர்கள் இருவர் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய வழக்கில், ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் ரகு சூர்யா உள் பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், பீளமேடு பகுதி யைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்க ளான சூர்யா மற்றும் தேவராஜ் ஆகியோர் ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப் போது அங்கு வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்றுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஆயுதங் களுடன் சூர்யா மற்றும் தேவராஜ் மீது தாக்கு தல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த சூர்யா மற்றும் தேவராஜ், பீளமேடு காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப் படையில் வழக்குப் பதிவு செய்த போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரின் விசாரணையில், தாக்குத லில் ஈடுபட்டவர்கள் ஈரோடு பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரகு சூர்யா மற்றும் ரிச்சர்ட், ஸ்ரீமன் தீபக், சூரிய குமார், வேதநாயகம், வினோத் குமார், முக மது உமர், உதயதீபன் ஆகிய 9 பேர் எனத் தெரியவந்தது. இவர்களை பீளமேடு போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஜக நிர்வாகிகள் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டது, அக்கட்சியின் நடவ டிக்கைகளை பிரதிபலிப்பதாக பொது மக்கள் தங்களின் அதிர்ப்தியை வெளிப் படுத்தினர்.