வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக
29 Nov 2025, 4:58 pm
<p><strong>வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</strong></p>
<p>வேலூர், நவ.29- ஞாயிறன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தெரிவித்தார். மாநில பேரிடர் மீட்பு துறையிலிருந்து 30 வீரர்கள் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ளனர். ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 40 ஏரிகள் 90 சதவீதத்திற்கு மேல் நீர்நிலையை எட்டியுள்ளன. இவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. 1077 எண்ணில் வரும் புகார்க ளுக்கு 24 மணி நேர அலுவலர்கள் தயாராக உள்ளனர். மாநகராட்சி தாழ்வான பகுதிகளில் 5 மண்டபங்கள், பள்ளி களில் தங்கவைக்க தயார் நிலை செய்யப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 36 பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>
