ஆரம்பப்பள்ளி முன் சுகாதார சீர்கேடு
21 Jan 2026, 3:58 pm
<p><strong>ஆரம்பப்பள்ளி முன் சுகாதார சீர்கேடு </strong></p>
<p>கோவை, ஜன.21- ரத்தினபுரி ஆரம்பப் பள்ளி முன் சுகாதார சீர் கேட்டை கண்டித்து, மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பேனர் வைத்து கண்டனங்களை தெரிவித்தன. கோவை, ரத்தினபுரி ஆரம்பப்பள்ளி முன் ஏற்பட் டுள்ள சுகாதார சீர்கேட்டை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பள்ளி அருகே சூழ்ந்திருக்கும் கழிவு நீரை அகற்றி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பேனர் வைத்து தங்கள் கண்டனங்களை பதிவு செய் துள்ளன. உடனடியாக கழிவுகளை அகற்ற வலியுறுத்தி யுள்ளனர்.</p>
