பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்க சிறப்பு தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
29 May 2026, 12:01 am
<p><strong>பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்க சிறப்பு தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு</strong></p><p>கும்பகோணம், மே 28- கும்பகோணத்தில், தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கும்பகோணம் நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜான் பண்டிகையைப் போலவே, பக்ரீத் பண்டிகைக்காகவும் கும்பகோணத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், ஹாஜியார் பள்ளிவாசல் உள்ளிட்ட ஏழு ஜமாத்துகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்புகள் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் மத அறிஞர்கள் பக்ரீத் திருநாளின் முக்கியத்துவம், தியாகத்தின் அவசியம், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் குறித்து உரையாற்றினர். சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பிறகு, உலக அமைதிக்காகவும், நாட்டில் நல்லிணக்கம் வளரவும், அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழவும், ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தொழுகை முடிவடைந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ‘ஈத் முபாரக்’ கூறி பக்ரீத் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். இதனை அடுத்து இஸ்லாமிய மரபுப்படி குர்பானி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. குர்பானி இறைச்சி ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு, பகிர்வு மற்றும் பரிவு உணர்வு வெளிப்படுத்தப்பட்டது. பல இடங்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.</p>
