தீக்கதிர் முக்கிய செய்திகள்
5 Jun 2026, 9:27 pm

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு பெ. சண்முகம் கண்டனம்!

சென்னை, ஜூன் 5- ஆளும் தவெக ஆதரவுடன், மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, அவரது ‘எக்ஸ்’ பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தார். அதில், ‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணி’ யின் முதல் எம்.பி. வேட்பாளராக தாம் தேர்ந்தெடுக் கப்பட்டு இருப்பதாக கூறியதுடன், இந்த புதிய கூட்டணி யில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சி களோடு, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளையும் இணைத் திருந்தார். இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு, ‘அதிக பிரசங்கித்தனம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கருத்துப் பதிவிட்டிருக்கும் பெ. சண்முகம், “புதிய கூட்டணியின் சார்பில், தான் மாநிலங் களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி யிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, அதில் சிபிஐ(எம்) பெய ரைக் குறிப்பிட்டு இருப்பது தவறானது” என்று கூறியு உள்ளார். “கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாள ருக்கு (பிரவீன் சக்கரவர்த்திக்கு) ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை” என்று கூறியிருக்கும் பெ. சண்முகம், “தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளது, என்பது; ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டு உள்ள நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி அவர் களின் பதிவை ‘அதிக பிரசங்கித்தனம்’ என்றே சொல்ல வேண்டும்” என்றும் சாடியுள்ளார்.

சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் தாங்கள் இடம் பெறவில்லை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சென்னை, ஜூன் 5 - பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் தாங்கள் இடம் பெறவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீன் சக்கர வர்த்தி தனது வலைதள பதிவில் “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்” தான் மாநிலங் களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட் டுள்ளார். அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட் டுள்ளார். இது தவறானது. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப் பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இதுகுறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை. அத்தகைய, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது. நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கி யது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங் களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது” குறிப்பிடப்பட்டு உள்ளது.

காயிதே மில்லத் 131 ஆவது பிறந்த நாள்: முதல்வர் - தலைவர்கள் மரியாதை

சென்னை: கண்ணிய மிக்க காயிதே மில்லத் அவர்களின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவா சல் வளாகத்தில் அமைந் துள்ள அவரது நினைவிடத் தில் மலர்ப்போர்வை அணி வித்து மரியாதை செலுத்தி னார். நிகழ்ச்சியில் சட்டப்பேர வைத் தலைவர் பிரபாகர், அமைச்சர்கள், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செய லாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ. அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மற்றும் முன்னணி தலை வர்கள் காயிதே மில்லத் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.