தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 May 2026, 9:34 pm

ஜன சூரஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்

பீகாரில் பெரிய வாக்குறுதிகளை அளித்து பாஜக வாக்கு சேகரித்தது. ஆனால் ஆட்சி அமைத்தப் பின்பு மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னமும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்வது தொடர்கிறது. பெரிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. குற்றச் சம்பவங்களும் உச்சத்தில் உள்ளன.

சமாஜ்வாதி மூத்த தலைவர் எஸ்.டி.ஹசன்

நமாஸ் வெறும் அரை மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடுகிறது. இதற்கு பாஜக ஆட்சியில் பல்வேறு தடை உள்ளது. ஆனால் கன்வார் யாத்திரைக்கு பல வாரங்களாக சாலைகள் முடக்கப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்பட்டால், அவை அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்படுத்தக் கூடாது.

அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ்

வாக்காளர்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் எஸ்ஐஆர் தீர்ப்பிற்குப் பிறகு அரசாங்கமே வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ்

எஸ்ஐஆர் செயல்பாடானது தன்னிச்சையான போக்கினாலும், வெளிப்படைத்தன்மை இல்லாமையினாலும் சூழப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான குடிமக்களைப் பாதிக்கும். ஆனால் எஸ்ஐஆர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து நீதித்துறைக்கும், நமது குடியரசுக்கும் ஒரு இருண்ட நாளாகவே இருக்கும்.