முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

13 May 2026, 9:02 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக சமூக ஆர்வலர் கர்கா சட்டர்ஜியை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே உள்ள சந்தேகத்தை மேலும் ஆழமாக்கும்.

பத்திரிகையாளர் ரோகிணி சிங்

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன, இதனால் உள்நாட்டு எரிபொருள் விலைகளும் அதிகரிக்கக்கூடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? ஓஎன்ஜிசி நிறுவனத்தின் உற்பத்தியை ஏன் மோடி அரசு அதிகரிக்கவில்லை? பெரிய அளவிலான வெளிநாட்டு எண்ணெய் ஆய்வு நிறுவனங்கள் ஏன் இந்தியாவிற்குள் நுழையவில்லை? மிகச் சிறிய நாடுகள் கூட இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் போது, இந்தியா இதில் தோல்வியடைந்தது ஏன்?

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

2016 முதல் தற்போது வரை தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவிலிருந்து முறைகேடுகள் நடக்கின்றன. விசாரணைகளும் சரியில்லை. இந்தத் தொடர் சங்கிலி எப்படித் தடையின்றித் தொடர்கிறது என்பது குறித்துப் பலத்த கேள்விகள் எழுகின்றன.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

தேர்தல் முடிந்த பிறகு தான் மோடிக்கு கட்டுப்பாடுகள் நினைவுக்கு வந்தனவா? பாஜக தலைவர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான விமானங்கள் என்ன தண்ணீரில் பறந்தனவா? இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் பொதுமக்களுக்கு மட்டும்தானா?

Share
FacebookXWhatsAppTelegram