மாற்றத்தின் புதிய அலை: ஜனநாயகத்தின் குரலாய் எழும் இளைய தலைமுறை வாலிபர் சங்க கேரள மாநாட்டில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் முழக்கம்
22 Aug 2026, 9:06 pm

மாற்றத்தின் புதிய அலை: ஜனநாயகத்தின் குரலாய் எழும் இளைய தலைமுறை

வாலிபர் சங்க கேரள மாநாட்டில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் முழக்கம்

திருவனந்தபுரம், ஆக. 22 -இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது கேரள மாநில மாநாடு திருச்சூரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில், புகழ்பெற்ற திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரை, நாட்டின் இளைய தலைமுறை மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட வாலிபர் சங்க மாநாட்டுத் தீர்மானம், இன்று நாடு முழுவதும் உள்ள இளைஞர் - மாணவர் அமைப்புகளின் மாபெரும் கூட்டு இயக்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

‘மூளை நக்ஸல்கள்’ முத்திரையும், இளைய தலைமுறையின் ஆவேசமும்

நாட்டின் 80-வது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கேள்வி கேட்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மாணவர்களையும் ‘மூளை நக்ஸல்கள்’ (Dimagi Naxals) என்று முத்திரைக் குத்தி விமர்சித்திருந்தார். இதற்கு திருச்சூர் மாநாட்டில் பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ், நாட்டின் உண்மையான ஜனநாயக சக்திகளான இளைஞர்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் அஞ்சுவதையே இந்த வார்த்தைகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

காட்டில் வேட்டை விலங்கைக் கண்டவுடன் பிற விலங்குகள் எச்சரிக்கை எழுப்புவது போல, நாட்டின் இளைஞர்கள் இப்போது தங்களை ஆட்டிப்படைக்கும் ‘வேட்டைக்காரனை’ச் சரியாக அடையாளம் கண்டுவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வினாத்தாள் கசிவு ஊழல்கள் மற்றும் நீட் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நாட்டின் இளைஞர்கள் காட்டி வரும் எதிர்ப்பும் எழுச்சியும், இந்தியாவில் பாசிச ஆட்சி முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

ஜந்தர் மந்தர் கொந்தளிப்பும், நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்த இளையோர் எழுச்சியும்

“முன்பெல்லாம் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தினாலும், அவர்களுக்கு வாழ்வாதாரம், வேலை, நிலம் என இழப்பதற்குப் பல விஷயங்கள் இருந்ததால் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் தேக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் வீரியத்தையும் அழகையும் நாடு கண்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதுடன், தில்லி வீதிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அணிவகுத்தனர். முதன்முறையாக அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்தபோது, அதிகாரத்தில் இருப்பவர்களின் அரியணை நடுங்கியது. சிந்திக்கத் தெரிந்த மூளையையும், கேள்வி கேட்கும் இளைஞர்களையும் கண்டு தங்களுக்குப் பயம் என்பதை ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. முதன்முறையாக மக்கள், “நாங்கள் உங்களைக் கண்டு அஞ்சவில்லை” என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபடாமல், அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி நேருக்கு நேராகக் கேள்வி கேட்கும் நிலைக்கு இளைஞர்கள் உயர்த்தப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது”

என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

சமூக ஊடகப் போரும், மாற்று அரசியல் பார்வையும்

இன்றைய இளைய தலைமுறை தங்களது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் சமூக ஊடகங்களைச் சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமூக ஊடகத் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கண்டு அதிகார வர்க்கம் நடுங்குவதாகத் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியின் தவறுகளால்தான் அது வீழும் என்பதால், இந்த பாசிச சக்திகள் வீழும்போது, அதற்கு மாற்றாக மற்றொரு வடிவில் வேறு எந்த பாசிச சக்தியும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் வாலிபர் சங்கமும், இளைஞர்களும், முற்போக்காளர்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மாற்று அரசியலை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதில் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் அழைப்பு விடுத்தார்.

நீதிக்கான நீண்ட நெடிய பயணம்

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதே தனது வாழ்வின் லட்சியம் எனக் குறிப்பிட்டபிரகாஷ் ராஜ், வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே நினைத்தால் நாம் விரைவில் சோர்வடைந்து விடுவோம்என்றார். ஆனால், சமூக நீதிக்கான போராட்டம் என்பது ஒரு நீண்ட நெடிய பயணம் என்று அவர் குறிப்பிட்டார்.தாங்கள் வெறும் 10 அல்லது 15 ஆண்டுகள் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கப் போவதாகவும், ஆனால்வரவிருக்கும் 40 முதல் 50 ஆண்டுகால எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கப் போகும் இளையதலைமுறைதான் தேசத்தின் உண்மையான சக்திகள் என்றும் அவர் ஊக்கமளித்தார். நமது முந்தையதலைமுறையினர் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளைச் சரிசெய்யவும், உண்மையான ஜனநாயகத்தைப்பாதுகாக்கவும் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்தார்.