ஒன்றிய அரசின் கொள்கை கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைக்கிறது
26 May 2026, 9:07 pm

ஒன்றிய அரசின் கொள்கை கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைக்கிறது

பிரகாஷ் ராஜ் சாடல்

திருவனந்தபுரம் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் இந்தி யாவின் கூட்டாட்சி கட்டமைப்பைச் சீர்குலைப் பதாக திரைக்கலைஞர் பிர காஷ் ராஜ் குற்றம்சாட்டி யுள்ளார். திருவனந்தபுரத்தில் நடை பெற்ற கேஜிஓஏ (கேரள அரசு அதிகாரிகள் சங்கம்) வைர விழா மாநாட்டின் , கலாச்சார மாநாட்டை தொடங்கி வைத்து அவர் மேலும் கூறு கையில்,“டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் சதி மற்றும் குழந்தை திருமணம் ஆகிய வற்றை உள்ளடக்கிய இந்தியாவின் பழமையான அமைப்பை மாற்றியமை த்துக் கொண்டிருந்தார். அம் பேத்கரின் போராட்டம் ஆங்கி லேயர்களின் கருத்துக்க ளுக்கு எதிரானதல்ல, மாறாக இந்தியாவில் நிலவிய ஆர் எஸ்எஸ் கருத்துக்களுக்கும், மனுஸ்மிருதிக்கும் எதிரா னது. அதற்கு எதிராகப் போரா டியே அவர் அரசியலமைப் பை உருவாக்கினார். இந்தி பேசுவதிலோ, அந்த மொழி யில் நடிப்பதிலோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்தி யைத் திணிக்க முயற்சிப்பது ஒரு பெரிய சிக்கலை உரு வாக்கும். நான் எப்போதும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன். தற்போது உரு வாகி வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ கூட சுதந்தி ரத்தைப் போதிக்கிறது. ஒரு கலைஞராக இழப்பதற்கு எதுவும் இல்லை. மக்களின் அன்பும் பாசமும் இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் தொடர் வேன்” என பிரகாஷ் ராஜ் கூறினார்.