முந்தய பக்கம்

பணத்தை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

25 Mar 2026, 5:29 pm
பணத்தை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு
<p><strong>பணத்தை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு</strong></p> <p>கோவை, மார்ச் 25- கோவையில் சாலையில் கண்டெடுத்த 9,500 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத் தில் ஒப்படைத்த நான்காம் வகுப்பு மாணவி யின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டினர். கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்த மணீஷ் என்பவரது மகள் ஜான்வி (9). இவர் &nbsp;புலியகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் பயின்று வருகிறார். புதனன்று மதியம் தனது தந்தையுடன் தேர்வீதி பகுதியில் நடந்து &nbsp;சென்றபோது, சாலையில் ஒரு மணிபர்சு கிடப் பதைக் கண்டுள்ளார். அதை எடுத்துப் பார்த்த போது, உள்ளே 9,500 ரூபாய் ரொக்கம், ஏ.டி.எம் கார்டு மற்றும் ஆதார் அட்டை உள் ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். மகளின் நேர்மையில் நெகிழ்ந்த அவ ரது தந்தை, உடனடியாக அவரை கடைவீதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென் றார். அங்கு ஆய்வாளர் சங்கரிடம் அந்த மணி பர்சை ஜான்வி ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீ சார், அதில் இருந்த முகவரியை வைத்து பாப் பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் &nbsp;ஹரீஸ் என்பவரைத் தொடர்பு கொண்டனர். காவல் நிலையத்திற்கு வரவழைக்கப் பட்ட ஹரீஸிடம், மாணவி ஜான்வி தனது &nbsp;கைகளாலேயே மணிபர்சை வழங்கினார். சிறு வயதிலேயே இத்தகைய நேர்மையு டன் செயல்பட்ட மாணவியைப் பாராட்டி, &nbsp;ஆய்வாளர் சங்கர் அவருக்கு பொன்னாடை &nbsp;போர்த்தி கௌரவித்தார். பொதுமக்களும் அந்தச் சிறுமிக்குத் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram