போல்வால்ட் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைக்கு பாராட்டு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>போல்வால்ட் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைக்கு பாராட்டு</strong></p>
<p>மயிலாடுதுறை, மார்ச் 31- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் பரணிகா. இவர், போல்வால்ட் போட்டியில் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய முதல் உள்ளரங்கு தடகள போட்டியில் 4 மீட்டர் போல்வால்ட்டில் பங்கேற்றார். இதுவரை தேசிய அளவில் 4.21 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்த நிலையில், இப்போட்டியில் பரணிகா 4.22 மீட்டர் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். சாதனை படைத்த போல்வால்ட் வீராங்கனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.</p>
