தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!

6 Jun 2026, 9:15 pm
‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!

‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!

ஓஸ்லோ, ஜூன் 6 - நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை தமிழ்நாட்டின் பிரக்ஞா னந்தா பெற்றுள்ளார். நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்றது.

உல கின் முன்னணி 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10ஆவது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.

இதில், கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய பிரக்ஞானந்தா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி னார்.

இறுதியில் வின்சென்ட் செய்த தவறு களைச் சாதகமாக்கிக் கொண்டு, மிக நேர்த்தியாக விளையாடி முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார்.

இறுதிச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 18 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். வெஸ்லி 17 புள்ளிகள், அலிரேசா பிரோஸ்ஜா 15.5 புள்ளிகள், கார்ல்சன் 13 புள்ளிகள், வின்சென்ட் கீமர் 11 புள்ளி கள், மற்றொரு இந்திய வீரர் டி. குகேஷ் 8 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞா னந்தாவிற்கு பிரதமர் மோடி, தமிழக முத லமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலை வர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள னர்.

முன்னதாக நடைபெற்ற 9 சுற்று களின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி சோ 15.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

பிரக்ஞானந்தா 15 புள்ளிகளு டன் 2-ஆவது இடத்திலும், பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜா 14.5 புள்ளிகளு டன் 3ஆவது இடத்திலும் இருந்தனர்.

இந்திய நேரப்படி சனியன்று அதிகாலை நடைபெற்ற இறுதிச்சுற்றில் வெஸ்லி சோ, அலிரேசா பிரோஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆக, வின்சென்ட் கீமர் உட னான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பட்டம் பெற்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.