செஸ் சாம்பியன்கள் பிரக்ஞானந்தா, சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு வாழ்த்து
7 Jun 2026, 9:09 pm
<p><strong>செஸ் சாம்பியன்கள் பிரக்ஞானந்தா, சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு வாழ்த்து</strong> </p><p>சென்னை, ஜூன் 7- நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. </p><p>இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கும், ஆசிய தனி நபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று 2027 பிடே (FIDE) உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கும் சிபிஎம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தங்கள் அசாத்திய திறமையால் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இரு இளம் சாதனையாளர்களும் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.</p>
