தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

28 May 2026, 10:46 pm
விளையாட்டு

நார்வே செஸ் 2026 கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா கலக்கல் வெற்றி

நார்வே செஸ் தொடர் ஓஸ்லோவில் (நார்வே தலைநகர்) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதனன்று நள்ளிரவு (இந்திய நேரப்படி வியாழனன்று காலை) நடைபெற்ற ஓபன் (ஆடவர்) பிரிவின் 3ஆவது சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா (20 வயது - தமிழ்நாடு), உலகின் நம்பர் 1 வீரரும், உள்ளூர் நாயகனுமான (நார்வே) மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடும் போராட்டம் நிகழ்ந்தது. எனினும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் கார்ல்சனை வீழ்த்தி, பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இதே நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதன்முதலாக கார்ல்சனை கிளாசிக்கல் போட்டியில் தோற்கடித்திருந்தார். குறிப்பாக இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா (4.5 புள்ளிகள்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக சாம்பியன் டி.குகேஷை (19 வயது - சென்னை) வீழ்த்திய பிரான்ஸ் நாட்டின் பிரோஸ்ஜா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

திவ்யா தேஷ்முக் அபாரம்

மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் மற்றொரு இந்திய வீராங்கனையான கொனேரு ஹம்பி, உக்ரைனின் அன்னா முசிசுக்கிடம் டைபிரேக்கர் வரை போராடி தோல்வியடைந்து, ஹாட்ரிக் தோல்வியுடன் சொதப்பி வருகிறார். மகளிர் பிரிவில் அஸவ்பாயேவா (கஜகஸ்தான்) 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் அவரை விட ஒரு புள்ளி குறைவாகப் பெற்று (4.5 புள்ளிகள்) 2ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரூத், ஜுவரேவ் அபாரம்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் இல்லாத செக்குடியரசின் தாமஸை எதிர்கொண்டார். வலுவான ஷாட்களு டன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜுவரேவ் 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறி னார். அதே போல மற்றொரு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள நார்வே நாட்டின் காஸ்பர் ரூத், தரவரிசையில் இல்லாத செர்பியாவின் மெட்ஜெடோ விச்சை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரூத் 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். முச்சோவா கலக்கல் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் முச்சோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமி லாவை (தரவரிசையில் இல்லாத) வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னே றினார். அதே போல அமெரிக்காவின் ஜோவிச்சும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.