தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

20 Mar 2026, 2:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் - பாஜக இடையே ரகசிய உடன்பாடு பிரதீப் பட்டாச்சார்யா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் - பாஜக இடையே ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,”மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள “செயற்கையான இருமுனைப் போட்டி” இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கான அரசியல் களத்தைச் சுருக்கவே ஆகும். ஆனால் இது பலிக்காது. குறிப்பாக, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மிகவும் கடினமானது. இதன் முடிவை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. அரசியல் விவாதம் முழுவதும் திரிணாமுல் - பாஜக என்று மாற்றப்பட்டுள்ளது. இது காங்கிரஸையும் இடதுசாரிகளையும் ஓரங்கட்டவே செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மக்கள் மிகவும் விழிப்புணர்வு மிக்கவர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்” என அவர் கூறினார்.

அசாம்: பாஜகவை வீழ்த்த கைகோர்த்த எதிர்க்கட்சிகள்!

அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, காங்கிரஸ் தலைமையிலான ‘மெகா கூட்டணி’ (அசாம் சன்மிலிதோ மோர்ச்சோ) தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. இணைந்த ராய்ஜோர் தளம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அகில் கோகாய் தலைமையிலான ‘ராய்ஜோர் தளம்’ கட்சி அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கட்சிக்கு மொத்தம் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு தொகுதிகளில் மட்டும் இரு கட்சிகளுக்கும் இடையே ‘நட்பு ரீதியிலான போட்டி’ நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் கண்டவர் மீண்டும் களத்தில் ராய்ஜோர் தளத்தின் தலைவரான அகில் கோகாய், மீண்டும் தனது கோட்டையான சிவசாகர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அசாம் தேசிய பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கைகோர்த்துள்ள நிலையில், ராய்ஜோர் தளத்தின் வருகை பாஜகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவில் குடியேறிய காங்கிரஸ் தலைவர்கள்!

அசாம் மாநில பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், அந்தக் கட்சி எந்தளவுக்குக் காங்கிரஸைச் சார்ந்து இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்த லில் போட்டியிடும் 88 வேட்பாளர் களில் பெரும்பாலோர் காங்கிரஸி லிருந்து சமீபத்தில் குதித்தவர்களே. உள்ளூர் பாஜகவினர் அதிர்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வரை காங்கிரஸில் இருந்தவர்களுக்கு, ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பாஜக தலைவர்களின் தொகுதிகள் தாராளமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நாகோன் எம்.பி. பிரத்யுத் போர்டோலோ உள்ளிட்ட பல முன்னாள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு பாஜக முன்னுரிமை அளித்துள்ளது. இதனால், தற்போதைய 19 பாஜக எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கட்சியை விட்டு ஓடும் எம்.எல்.ஏ-க்கள் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே, தோலாய் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிஹார் காந்தி தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். “வாய்ப்பு கிடைக்காதவர்கள் கோபப்படுவது இயல்பு” என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மழுப்பினாலும், அசாம் பாஜகவில் ‘காங்கிரஸ் மயம்’ ஆவது பழைய பாஜக தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொந்தக் கட்சியினரையே ஓரங்கட்டிவிட்டு, இறக்குமதி செய்யப்பட்ட தலைவர்களை வைத்து பாஜக நடத்தும் இந்த அரசியல், அசாம் தேர்தல் களத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.