தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“இந்துத்துவா அரசு என்பது ஏகபோக மூலதனத்தின் நவீன பாசிச சர்வாதிகாரம்! - பேரா. பிரபாத் பட்நாயக்

5 Jul 2026, 9:11 pm
“இந்துத்துவா அரசு என்பது ஏகபோக மூலதனத்தின் நவீன பாசிச சர்வாதிகாரம்! - பேரா. பிரபாத் பட்நாயக்

“இந்துத்துவா அரசு என்பது ஏகபோக மூலதனத்தின் நவீன பாசிச சர்வாதிகாரம்! - பேரா. பிரபாத் பட்நாயக்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம், இந்துத்துவா அரசை (இந்து ராஷ்ட்ரா) நிறுவுவதுதான். இந்திய அரசியல் சாசன சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சரிசமமாக நடத்தப்படும் தற்போதைய அரசமைப்பிற்குப் பதிலாக, மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்க ளோடு ஒப்பிடுகையில், இந்துக்களுக்கு மட்டும் உயரிய அந்தஸ்தைத் தரக்கூடிய அமைப்பாக அது இருக்கும் என்பதே இதற்கான உடனடி பதில். இத்தகைய பாகுபாடு ஒரு அடக்குமுறை அரசாலேயே முடியும். வர்க்க ஒடுக்குமுறையைக் கடைப்பிடிக்கிற அரசுகள் அனைத்துமே அடக்குமுறை அரசுகள்தான். ஆனால், பாகுபாடுகளை நிறுவனமயமாக்குகின்ற அரசு, இன்னும் கூர்மையாக அடக்குமுறைகளை மேற்கொள்ளும். இந்து அரசு என்பது ஒரு கூட்டுத் தன்மையுடன், இந்துக்கள் மற்ற மதங்களைச் சார்ந்த வர்கள் மீது செலுத்துகிற சர்வாதிகாரமாக இருக்குமா என்ற கேள்விக்கு, ‘இல்லை’ என்பதே விடை.

ஏகபோக மூலதனத்தின் சர்வாதிகாரம்

ஒரு இந்து அரசில், ஒரு ரிக்சா தொழிலாளி அல்லது ஜிக் தொழிலாளி அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அதே நிலையில்தான் இருப்பார். இம் மாற்றம் பெரும்பான்மையான இந்து மக்களின் வாழ்க்கை தளத்தில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாது; அதற்கான உத்தரவாதத்தையும் தராது. அப்படியெனில் அரசின் சர்வாதிகாரமானது யாருடைய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்? ஏகபோக மூலதனத்தின் நலன்களுக்காகவே அது பயன்படுத்தப்படும். இந்து அரசு என்பது அதன் பெயரில் உள்ளதைப் போல் அல்லாமல், ஏகபோக மூலதனத்தின் சர்வாதிகாரமாகும். வெளித்தோற்றத்தில் போலியாக அரசு நிகழ்ச்சி களில் இந்து மதச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படும். வேலைவாய்ப்புகளில் இந்துக்க ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப் பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைக் (AI) கையாள்வதால் இன்றுள்ள பணிகளும் மறைந்து போகும். இஸ்லாமியர்களும் மற்ற சிறுபான்மையினரும் கடுமையான ஒடுக்கு முறைகளைச் சந்திக்க நேரிடும் அதேவேளையில், இந்துக்களும் தங்களின் துயரங்களிலிருந்து எந்த நிவாரணமும் பெற இயலாது. ஏகபோக முதலாளி வர்க்கமே வலுப்பெறும். குறிப்பாக அதானிகளும் அம்பானிகளும் ஆதிக்கம் செலுத்துகிற அரசாகவே இது இருக்கும். 1930-களில் ஜெர்மனியில் யூதர்கள் மற்றும் ஜிப்ஸிகளை ஒடுக்கி ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியதாக நாஜிக்கள் வாதிட்ட சூழல் இது. நாஜிக்களின் அரசு, ஆரியர்களின் அரசாக இருக்க வில்லை. கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ் 1935-ல் குறிப்பிட்டதைப் போல, “அது மிகவும் பிற்போக்குத்தனமான, மிகுந்த இனவாத, மிகுந்த ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் வெளிப்ப டையான தீவிரவாத அடக்குமுறை அரசாகும்”. சம காலத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதன் மூலமும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பாவிப்பதன் மூலமும் உழைக்கும் மக்களை இனம், மத, மொழி அடிப்ப டையில் பிரிப்பது உண்மையில் ஏகபோக மூல தனத்தின் நலனைக் காப்பதற்கே ஆகும். அரசை நடத்துபவர்களே அதனைப் பற்றி விவரிப்பது உண்மை நிலையை விவரிப்பதாகாது. எந்த வர்க்கம், தன்னுடைய வர்க்க நலனைப் பேணுவதற்காக அரசைப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே நாம் கேட்க வேண்டிய உண்மையான கேள்வி.

நவீன தாராளமயத்தின் முட்டுச்சந்தும் பிளவுவாத அரசியலும்

ஏற்கனவே இருக்கின்ற மதச்சார்பற்ற அரசே ஏகபோக மூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படு கின்ற போது, புதிய சர்வாதிகார அரசை நிறுவ ஏக போக மூலதனம் ஏன் விரும்புகிறது? பொருளாதாரம் தேக்கமடைந்து வேலையின்மை மிகப் பெரும் அளவில் அதிகரிக்கும் போதுதான் இத்தேவை எழு கிறது. நவீன தாராளமயம் பொருளாதாரத்தைத் தேக்க நிலைக்குக் கொண்டு வந்து, பெருமளவில் வேலையின்மையையும் உழைக்கும் மக்கள் வாழ்வில் துயரத்தையும் ஏற்படுத்தி, ஒரு முட்டுச் சந்திற்கு வந்துள்ளது. எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கும் போராடு வதற்கும் ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பினைத் தருகிறது. ஆகை யால்தான் கடினமான சூழ்நிலைகளில் ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடக்கிறது. கவனச் சிதறலை ஏற்படுத்தி வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கும் வகையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளோடு ஏகபோக மூலதனம் அணி அமைத்துக் கொள்கிறது. மதவாத அரசை நிறுவு வதன் மூலம் ஜனநாயகத்தை அடக்குவதை அது நியாயப்படுத்துகிறது. இந்தியச் சூழலில் இதுதான் இந்து அரசாகும். இதனை ஆர்எஸ்எஸ் - பாஜகவின் திசை திருப்பும் வேலைகளில் அப்பட்டமாகக் காண முடி கிறது. இளைஞர்கள் வேலையின்மையால் அவதி யுறும்போது, ஆட்சியாளர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவல் என போலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். பாஜகவினர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) நாட்டின் வளர்ச்சிக்கான அளவுகோலாக மதிப்பி டுகிறார்கள். ஆனால், வங்கதேசம் இந்தியாவை விட அதிகமான தனிநபர் வருமானம் கொண்ட நாடாக உள்ளது. அவர்களின் அளவுகோல்படியே பார்த்தால், வங்கதேசம் இந்தியாவை விட வளர்ந்த நாடு. அப்படியெனில், வளர்ந்த நாட்டிலிருந்து வளர்ச்சி குறைந்த நாட்டிற்கு ஊடுருவல் நடக்கிறது என்கிற வாதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணி

இந்தியாவில் இந்துத்துவாவின் எழுச்சி என்பது உலகளாவிய நவீன பாசிச எழுச்சியின் ஒரு பகுதியா கும். இது ஏகபோக மூலதனத்தால் நிதி மற்றும் ஊட கங்களின் உதவியோடு அரங்கேற்றப்படுகிறது. அர்ஜென்டினா முதல் அமெரிக்கா வரை, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் உலகப் பொருளாதாரத்தை நவீன தாராளமய முதலாளித்துவமானது ஒரு முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள சூழலில்தான் இது நடக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சமீபத்தில் தனது நூற்றாண் டைக் கொண்டாடியது. நூறு வருடங்களாக ஆட்சி அதி காரத்தின் அருகில் கூட இல்லாத அது, திடீரெனப் பேரா திக்கத்தில் அமர்ந்திருப்பதும், பாஜக பெரும் பணக் காரக் கட்சியாக இருப்பதும் ஏகபோக மூலதனத்தின் முழு ஆதரவாலேயே சாத்தியமாகியுள்ளது. ஏகபோக மூலதனம் மட்டும் இந்துத்துவாவிற்கு நெருக்கமாகி விடவில்லை, இந்துத்துவா சக்திகளும் ஏகபோக மூலதனம் குறித்த அணுகுமுறையை மாற்றியுள்ளன. ஆர்எஸ்எஸ்-இன் முக்கிய ஆதரவுத் தளமாக இருந்த சிறுகடை முதலாளிகள், சிறு முதலாளிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து இருவேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர். நரேந்திர மோடியின் வேலை என்பது கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணியைச் செதுக்குவதாகவே இருந்தது. இக்கூட்டணியை உருவாக்கியதன் மூலமே இந்துத்துவா அதிகாரத்திற்கு வர முடிந்தது. உண்மை யில், நரேந்திர மோடியைக் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியது முதலாளிகளின் “முதலீட்டாளர்கள் மாநாடு”தான். எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி ஏகபோக மூல தனத்தை ஆதரிப்பவராகவும், சர்வதேச நிதி மூல தனத்தோடு இந்திய ஏகபோக மூலதனம் கை கோர்த்துக் கொள்வதை ஊக்குவிப்பவராகவும் அவர் திகழ்கிறார். நவீன தாராளமய முதலாளித்துவம் ஸ்தம்பித்து நிற்கின்ற இந்த யுகத்தில், தன்னுடைய நவீன பாசிச திட்டத்தின் மூலமாக, மோடி இந்திய ஏகபோக மூலதனத்திற்கு ஒரு விலைமதிப்பில்லாத சொத்தாக நிற்கிறார். தமிழாக்கம்: செ.சிவசுப்ரமணியன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.