தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிபிஜி கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம்

16 Jul 2026, 10:16 pm
பிபிஜி கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம்

பிபிஜி கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம்

மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 16- கோவை பி.பி.ஜி கல்லூரியில் மாணவி சந்தேக மரணத்தை, நீதி கேட்ட மாண வர்களை, காவல்துறையை ஏவி மிரட்டும் நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாண வர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை, சரவணம்பட்டி பி.பி.ஜி கல்லூரி யில் பயின்று வந்த மாணவி ஒருவரின் சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய மாண வர்கள் மீது கல்லூரி நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து அராஜக ஒடுக்கு முறையை ஏவியுள்ளன. போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்களில் 7 பேருக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்குவதாக மிரட்டியும், ஒரு மாணவனை கைது செய்தும், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறை மூலம் எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் அச் சுறுத்தி வருகிறது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் இந்த கூட்டு அரா ஜகத்தைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவியின் மரணம் குறித்து உயர் மட்டக் குழு அமைத்து உட னடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், மிரட்டல் விடுத்த கல்லூரி நிர்வாகம், துறைத் தலைவர் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறையி னர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க மாவட்டத் தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கு.பாவெல் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் கண்டனவுரையாற்றினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி மற்றும் பி.பி.ஜி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் பிரசாந்த் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பிரச்சனை சம்பந்தமான மனு அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.