தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வை உத்தரவாதம் செய்ய வலியுறுத்தல்

24 Jun 2026, 9:29 pm
விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வை உத்தரவாதம் செய்ய வலியுறுத்தல்

விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வை உத்தரவாதம் செய்ய வலியுறுத்தல்

அவிநாசி, ஜூன் 24- மாநிலம் முழுவதும் விசைத்தறி தொழிலாளர்கள் முறையான கூலி உயர்வு பெறுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனக்குழு (சிஐடியு) கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் பி.முத்துசாமி, பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக 26,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நலவாரியப் ப

ணப்பயன்களை இரட்டிப்பாக்கி விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விசைத்தறி தொழிலாளர்களுக்குத் தனி அடையாள அட்டை அல்லது நலவாரிய அட்டை மூலம் குறைந்த வட்டியில் மானியக் கடன் வழங்க வேண்டும் எனவும், சிறு விசைத்தறிக்கான மின்சார மானியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி, அதனை யூனிட் அடிப்படையில் கணக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, விசைத்தறித் தொழிலுக்கான நூல் விலை உயர்வைக்கட்டுப்படுத்த மாநிலக் கூட்டுறவு நூற்பாலைகளைப் புனரமைத்து குறைந்த விலையில் தடையின்றி நூல் வழங்க வேண்டும் என்றும், கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தைப் போல விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தை விரிவாக்கம் செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இவற்றுடன், ஒன்றிய அரசின் ‘சிட்ரா’ குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.