அரசுப்பள்ளிக்கு நிலம் கேட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கம் மனு
29 Jun 2026, 12:26 am
<p><strong>அரசுப்பள்ளிக்கு நிலம் கேட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கம் மனு</strong></p><p>நாமக்கல், ஜூன் 28- பள்ளிபாளையம் அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிக்கு நிலம் கேட்டு, விசைத்தறி தொழி லாளர் சங்கம் மனு அளித் துள்ளது. சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒன்றியச் செயலாளர் கே.குமார் தலைமையில், காவேரி ஆர்.எஸ் பகுதியில் அமைந்துள்ள, தனியார் காகித ஆலை நிர் வாக இயக்குநரிடம் ஞாயிறன்று மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், பள்ளி பாளையத்தை அடுத்துள்ள பாப்பம்பாளை யம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2010 இல் எஸ்பிபி நிர்வாகத்தால் 2 ஏக்கர் நிலம் தான மாக வழங்கப்பட்டு, பள்ளி செயல்பட்டு வரு கிறது. மேற்கண்ட பள்ளியில் காவேரி ஆர்.எஸ்., ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளி களின் குழந்தைகள் 500க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், நாமக் கல் மாவட்டத்தில் மிகச்சிறந்த பள்ளியாக வும் திகழ்ந்து வருகிறது. அந்த பெருமை அனைத்தும் எஸ்பிபி நிர்வாகத்தையே சேரும். மேலும், கூடுதலான வகுப்பறை கள், ஆய்வுக்கூடம், சைக்கிள் நிறுத்தம், நூல கம், சத்துணவு பரிமாறும் கூடும் ஆகிய வைகளை அமைக்க போதுமான இடமில்லா மல் மேற்கண்ட வசதிகள் தடைபட்டுள்ளது. எதிர்கால குழந்தைகளின் கல்வி நலன் கருதி பள்ளிக்கு இணையாக உள்ள தங்கள் நிறு வனத்திற்கு, சொந்தமான அரை ஏக்கர் நிலத்தை தாராள மனதுடன் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில தானமாக தந்து உதவ வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், மனுடன் ஏற்கனவே பள்ளிக்கு நிலம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என 2000 பேருடைய கையெழுத்து அடங் கிய நகலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எம்.அசோகன், சங்க நிர்வாகி கள் செங்கோட்டையன், முருகேசன், தங்க ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
